ஒரு மேட்ச்ல அடிச்சுட்டு 5 மேட்ச் காலத்தை தள்ளும் ராகுலுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுக்கலாம் – சபாகரீம் அதிரடி

Karim
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் விளையாடி வருகிறது. முன்னதாக ஷமி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் பங்கேற்காத நிலையில் ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மாவும் இத்தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில் 2வது போட்டியிலும் இந்தியாவை வழி நடத்தி வருகிறார்.

KL-Rahul

- Advertisement -

ஆனால் 2019 வாக்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு துணை கேப்டனாக முன்னேறிய அவர் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக இந்தியா தோற்றாலும் பரவாயில்லை எப்படியாவது பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் செயல்படும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதை விட முதல் இன்னிங்ஸ் 150 ரன்களுக்கு வங்கதேசம் சுருண்ட போது கேப்டனாக பாலோ ஆன் கொடுக்க வேண்டிய அவர் மீண்டும் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநலத்துடன் இந்தியா மீண்டும் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

1 மேட்ச்ல அடிச்சுட்டு:
அத்துடன் 10க்கு ஓரிரு போட்டியில் அதுவும் கத்துக்குட்டிக்கு எதிராக மட்டுமே பெரிய ரன்களை குவிக்கும் அவர் அதை வைத்து எஞ்சிய 9 போட்டிகளில் குறிப்பாக அழுத்தமான பெரிய போட்டிகளில் சொதப்பலாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் அவர் மீது ஏராளமான ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இந்நிலையில் ஒரு போட்டியில் அடித்ததை வைத்து 5 போட்டிகளில் சொதப்பலாக செயல்படும் ராகுலுக்கு பதிலாக தற்சமயத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் அதிரடியாக பேசியுள்ளார்.

Shubman Gill

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் மேடு பள்ளங்கள் இருப்பது சகஜமாகும். ஆனால் கேஎல் ராகுல் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடி விட்டு அடுத்த 5 இன்னிங்ஸில் சொதப்பலாக செயல்படுகிறார். அதிகப்படியான அழுத்தத்தில் இருக்கும் அவருடைய மோசமான காலங்களும் கடந்து விட்டது. தற்போதெல்லாம் அவரால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாட முடிவதில்லை. எனவே 2வது போட்டியில் சுப்மன் கில் பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மிகப்பெரிய அழுத்தம் ஏற்படலாம்”

- Advertisement -

“பொதுவாக காயமடைந்து மீண்டும் வரும் ஒருவர் நேரடியாக அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர். அவர் இல்லாத சமயத்தில் வாய்ப்பைப் பெற்ற மற்றவர்கள் சதமடித்தது பெரிய விஷயம் கிடையாது. அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை ஓப்பனிங் வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ராகுல் இப்படி தொடர்ந்து சொதப்பினால் நம்மிடம் ஏற்கனவே சுப்மன் கில் அவருக்கு பதில் விளையாட தயாராக இருக்கிறார்” என்று கூறினார்.

Shubman Gill 1

அத்துடன் இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காத அஷ்வின் சந்தித்துள்ள விமர்சனங்களை பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ரவிச்சந்திரன் அஷ்வின் மிகவும் தரமான அனுபவம் வாய்ந்த பவுலர். அவர் நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : வீடியோ : 52 வயதிலும் அதிரடியாக பிரம்மாண்ட சிக்ஸருடன் அசத்தல் பேட்டிங் செய்த இன்சமாம் – கைதட்டி பாராட்டிய அஃப்ரிடி

அதனால் யாராக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உட்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்படும். அதற்காக அவர் முதல் போட்டியில் மோசமாக பந்து வீசினார் என்று அர்த்தமில்லை. அதனால் எந்த அழுத்தத்திலும் இல்லாத அவர் 2வது டெஸ்ட் மற்றும் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்துவார் என்று நம்பலாம்” என கூறினார்.

Advertisement