வீடியோ : 52 வயதிலும் அதிரடியாக பிரம்மாண்ட சிக்ஸருடன் அசத்தல் பேட்டிங் செய்த இன்சமாம் – கைதட்டி பாராட்டிய அஃப்ரிடி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒருநாள் கத்துக்குட்டியிடம் தோற்றால் மற்றொரு நாள் ஆஸ்திரேலியாவையே அசால்டாக தோற்கடிக்கும் கணிக்க முடியாத அணியாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் சூதாட்ட சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வரலாறு கொண்ட அந்த அணியில் வாசிம் அக்ரம், இம்ரான் கான் உட்பட ஏராளமான நிறைய உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களும் விளையாடிள்ளார்கள். அந்த வரிசையில் நட்சத்திர முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் வரலாற்றில் பாகிஸ்தான் கண்டெடுத்த மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

இளம் வயதிலிருந்தே இயற்கையாகவே பருமனான உடலைக் கொண்ட அவர் நிறைய தருணங்களில் ரசிகர்கள் சிரிக்கும் அளவுக்கு தம்மையும் தன்னுடைய பார்ட்னரையும் ஓட தெரியாமல் ஓடி ரன் அவுட் செய்த வரலாறுகள் ஏராளமாகும். ஆனால் அதையும் மிஞ்சி நல்ல நுணுக்கங்களுடன் பல தருணங்களில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் பாகிஸ்தானுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனாகவும் 20000+ ரன்கள் குவித்த ஒரே பாகிஸ்தான் பேட்ஸ்மேனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

- Advertisement -

1992 உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் மிகச் சிறந்த முறையில் பாகிஸ்தானை வெற்றிகரமாக வழி நடத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக 81 ஒருநாள் போட்டிகளில் 51 வெற்றிகளையும் 31 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த பாகிஸ்தான் கேப்டனாகவும் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் 50 ஓவர் கிரிக்கெட்டில் 10000+ ரன்களை குவித்த ஒரே பாகிஸ்தான் பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ள அவர் 2007இல் ஓய்வுக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

52 வயதிலும் அசத்தல்:
அந்த வகையில் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு உடல் எடை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த அவர் நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அப்படி பாகிஸ்தானின் ஜாம்பவானாக போற்றப்படும் அவருக்கு உலகம் முழுவதிலும் நிறைய ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற மெகா ஸ்டார் லீக் எனப்படும் ஒரு டி20 போட்டி நேற்று பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. அதில் சாகித் அப்ரிடி, முகமது ஹபீஸ், மிஸ்பா-உல்-ஹத் போன்ற நிறைய முன்னாள் நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

அபோட்டியில் கராச்சி கிங்ஸ் அணிக்காக நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கிய இன்சமாம் தமக்கே உரித்தான அதே ஸ்டைலில் நங்கூரமாக நின்றாலும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். குறிப்பாக லேட் கட் ஷாட்டை கச்சிதமாக அடித்த அவர் கவர் திசைக்கு மேல் பவுண்டரி பறக்க விட்டு அமர்க்களப்படுத்தினார். அதை விட தனது உடல் எடைக்கு தகுந்த பவரை கொடுத்து ஒரு பந்தை விளாசிய அவர் மிட் விக்கெட் திசைக்கு மேல் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்டு ஆச்சரியப்படுத்தினார்.

அவரது மிகச் சிறப்பான பேட்டிங்கை பார்த்து அவரது தலைமையில் விளையாடிய சாகித் அப்ரிடி உட்பட அனைத்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கைதட்டி பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக 2007இல் ஓய்வு பெற்று இத்தனை வருடங்களாகியும் 52 வயதாகியும் தமக்கே உரித்தான ஸ்டைலில் அவர் விளையாடிய இன்னிங்ஸ் பாகிஸ்தான் ரசிகர்களையும் பழைய நினைவுகளை நோக்கி அழைத்துச் சென்றது.

இதையும் படிங்க: இப்படியே பண்ணா நீ வீட்டுக்கு போக வேண்டியது தான். இளம்வீரரை கண்டித்த கேப்டன் சச்சின் – அவரே பகிர்ந்த தகவல்

அப்படி நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கினாலும் சிறப்பாக செயல்பட்ட அவர் ஓய்வுக்கு பின் 2012இல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில் 2016இல் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டார். அதன் பின் அந்த பதவிகளிலிருந்தும் விடை பெற்று தற்போது வர்ணணையாளராக செயல்பட்டு வரும் அவர் உலகம் முழுவதிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிய தன்னுடைய கருத்துக்களை தனியாக யூடியூப் சேனல் துவங்கி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement