நீங்க வேனா பாருங்க. அந்த பையன் இந்திய அணியில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பான் – சபா கரீம் உறுதி

Karim
- Advertisement -

சமீபத்தில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கெதிரான தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அணியானது இங்கு இந்திய அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடரானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 2 வகையான இந்திய அணிகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ கடந்த 27-ஆம் தேதி அறிவித்தது. இந்த அணியில் சீனியர் வீரர்கள் பலர் இடம்பெறவில்லை. அதேபோன்று இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்தவகையில் சமீபகாலமாகவே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் சொதப்பி வரும் ரிஷப் பண்டிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதன்காரணமாகவே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது தற்காலிக நீக்கமா? அல்லது அவர் ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இந்திய அணியில் இழந்த தனது இடத்தை நிச்சயம் ரிஷப் பண்ட் மீட்டெடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் ரிஷப் பண்டிற்கு முக்கியமான தொடராக அமையவுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் அவர் இழந்த இடத்தினை மீண்டும் பெறமுடியும். என்னை பொறுத்தவரை ரிஷப் பண்டிடம் இன்னும் நிறைய திறமை இருக்கிறது. எனவே நிச்சயம் அவர் ஐ.பி.எல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கட்டாயம் மீண்டும் இந்திய அணிக்கு பலமாக திரும்புவார் என்ற நம்பிக்கை தன்னிடம் இருபதாக சபா கரீம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் நேரடியாக தேர்வுசெய்யப்ட்ட பெங்கால் வீரர். யார் இவர்? – அப்படி என்ன செய்தார்?

கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் 21.41 ரன்கள் சராசரியுடன் 364 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 37.33 ரன்கள் சராசரியுடன் 336 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement