விராட் கோலியால் முடியாத இந்த ஒரு விஷயத்தை சொல்லித்தான் அவரை தூக்கியிருப்பாங்க – சபா கரீம் ஓபன்டாக்

Karim
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் தொடர்ந்து கேப்டனாக நீடிக்க விரும்பிய விராட் கோலி 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலக கோப்பை வரை கேப்டனாக நீடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வு குழு அவரை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.

Kohli

- Advertisement -

மேலும் இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்தது. விராத் கோலியின் இந்த பதவி நீக்கம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு தலைவருமான சபா கரீம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விராத் கோலியின் பதவியை பறித்துள்ளார்கள் என்று கூறுவதே சரியான ஒன்று. அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஆனால் விராட் கோலியின் பதவி இப்போது பறிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை ஐசிசி கோப்பைகளை அவரால் வெல்ல முடியாதது தான் அவரின் இந்த பதவி நீக்கத்திற்கு முதன்மையான காரணமாக இருக்கும்.

Kohli

அவரால் ஐ.சி.சி தொடர்களை வெல்ல முடியாததை சுட்டிக்காட்டித்தான் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பார்கள் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கோலியிடமிருந்து பதவி பறிக்கப்பட்டபோது அது குறித்து நிச்சயம் அவரிடம் பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் பேசியிருப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்கள் அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தும். கோலி செவி சாய்க்கவில்லை – பதவி நீக்கம் குறித்து கங்குலி பேட்டி

டிராவிட் எப்போதும் வீரர்களுக்கு இடையே சரியான புரிதலை கொண்டிருப்பார். எனவே நிச்சயம் டிராவிட் விராட் கோலியின் பதவி நீக்கம் குறித்து பேசியிருப்பார். அதேபோன்று பி.சி.சி.ஐ-யும் தங்களது திட்டங்களை விராட் கோலியிடம் சொல்லியிருக்கும். இறுதியில் விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றும் சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement