நாங்கள் அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தும். கோலி செவி சாய்க்கவில்லை – பதவி நீக்கம் குறித்து கங்குலி பேட்டி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து ரோகித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த நீக்கம் குறித்து சௌரவ் கங்குலி கூறுகையில் :

rohith

- Advertisement -

விராட் கோலியின் இந்த பதவி நீக்கம் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் ஆகியோரின் ஒருமித்த முடிவுதான். ஏற்கனவே விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த போது நாங்கள் அனைவரும் விராட் கோலியிடம் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் விராட் கோலி அதைக் கேட்கவில்லை. தான் கூறியபடியே டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அப்போது அணியின் தேர்வாளர்களுக்கு அவரின் இந்த முடிவை சரியானதாக தோன்றவில்லை. ஏனெனில் வொயிட் பால் (White Ball) கிரிக்கெட்டிற்கு இரண்டு தனித்தனி கேப்டன்கள் இருப்பது சரியானது கிடையாது என்று தேர்வாளர்கள் நினைத்தாலே தற்போது கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கங்குலி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசியவர் : டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ரோகித் கேப்டனாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி தொடர்ச்சியாக செயல்பட நாங்கள் முடிவு எடுத்தோம்.

Ganguly 1

ஒயிட் பால் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியானதல்ல என்பதாலேயே விராட் கோலியை வேறு வழியின்றி இப்படி பதவிநீக்கம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது என கங்குலி வெளிப்படையாக உண்மையான கருத்தினை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் அவர் பேசியதாகவும், தேர்வாளர்களும் விராட் கோலியிடம் பேசியதாகவும் ஆனால் விராட் கோலி அவர்களின் எவ்வித கருத்துக்களும் செவி சாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுதான் சரியான முடிவு. விராட் கோலியின் நீக்கம் குறித்து சர்ச்சையான கருத்தினை பதிவிட்ட – மைக்கல் வாகன்

இதன் காரணமாகவே ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்ததாகவும், ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு முழு தகுதியானவர் என்று அனைவரும் எண்ணியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை தேர்வு செய்ததாக கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இந்திய அணிக்காக ஆற்றிய மகத்தான பணிக்கு நன்றி தெரிவித்து தனது கருத்தினை கங்குலி முடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement