நல்லா தான் கேப்டன்ஷிப் பண்றீங்க. ஆனா நீங்க பண்ணும் தப்பு உங்களுக்கு தெரியுதா? – சபா கரீம் கேள்வி

Karim
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை என கடைசியாக தனது சொந்த மண்ணில் பங்கேற்ற 3 டி20 தொடர்களிலும் ஒரு போட்டியில் கூட தோற்காத இந்தியா அடுத்தடுத்த ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றிகளைப் பெற்று சொந்த மண்ணில் வலுவான அணியாக காணப்படுகிறது.

IND-1

- Advertisement -

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் முழு நேர டி20 கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர், இலங்கைக்கு எதிரான டி20 தொடர் என இதுவரை அவர் கேப்டன்ஷிப் செய்துள்ள 4 அடுத்தடுத்த தொடர்களில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்தியா 4 ஒயிட்வாஷ் வெற்றிகளைப் பெற்று சொந்த மண்ணில் வீர நடை போட்டு வருகிறது.

வேற லெவல் கேப்டன்ஷிப்:
குறிப்பாக டி20 போட்டிகளில் தனது அதிரடியான அபாரமான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மா கடந்த 2016க்கு பின் முதல் முறையாக இந்தியாவை உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக தரம் உயர்த்தி சாதனை படைத்துள்ளார்.

Rohith

அத்துடன் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை (16 வெற்றிகள்) பதிவு செய்த கேப்டன் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார். மொத்தத்தில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் இதுவரை அபாரமாகவும் அசத்தலாகவும் உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ரன்களும் அடிக்க வேண்டும்:
இருப்பினும் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவரின் பேட்டிங் லேசாக மந்தம் அடைந்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தனது பேட்டிங்காக மட்டுமே ரோகித் சர்மா லெவனில் உள்ளார். கேப்டன்ஷிப் என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கூடுதல் பொறுப்பாகும். பல நேரங்களில் கேப்டனாக பொறுப்பேற்க்கும் வீரர்கள் தங்களின் முதன்மை வேலையான பேட்டிங்கில் சொதப்புவார்கள். எனவே ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் கவனத்தை சிதற விடக்கூடாது” என கூறினார்.

Karim

கேப்டன்ஷிப் என்பது ஒரு கூடுதலான பொறுப்பு என்பது போல் நினைத்துக் கொண்டு ரோகித் சர்மா தனது முதன்மை வேலையான பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுவாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்த பணிச்சுமை காரணமாக பல வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புவார்கள். எனவே கேப்டன் பொறுப்பால் தனது பேட்டிங் கவனத்தை சிதறவிடாமல் ரோகித் சர்மா பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

டி20 உலககோப்பை வருது:
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இது வெறும் ஆரம்ப நிலைதான். அவர் தனது பேட்டிங்கில் ரன்கள் குவிப்பது தனது அணிக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர வேண்டும். குறிப்பாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் அவரின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அங்கு உள்ள மைதானங்கள் அளவில் பெரியதாக இருப்பதுடன் அங்கு பல தரமான வீரர்கள் பந்து வீசுவார்கள். எனவே ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

Chameera

ஏற்கனவே கடந்த பல வருடங்களாக ஐசிசி உலகக் கோப்பையை வாங்க முடியாமல் இந்தியா தவித்து வரும் வேளையில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா வாங்கி தருவார் என பல ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நல்ல கேப்டன்ஷிப் மட்டும் போதாது எனக்கூறியுள்ள சபா கரீம் மிகப்பெரிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் ரோகித் சர்மா போன்ற தரமான வீரர் ரன்கள் அடித்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என உண்மையை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றி. ஆனாலும் உ.கோ முன் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் – 3 விஷயங்கள் இதோ

இருப்பினும் அவர் கூறும் அளவுக்கு திடீரென ரோகித் சர்மா ஒன்றும் அவ்வளவு மோசமாக பேட்டிங் செய்யவில்லை என்பதால் இது பற்றி இந்திய ரசிகர்கள் பெரிதாக கவலைப்பட தேவையில்லை என்றே கூறலாம்.

Advertisement