IND vs AUS : அந்த 3 பேர் மட்டும் இல்லனா இந்நேரம் நாம ஆஸ்திரேலியா கிட்ட தோத்துருப்போம் – சபா கரீம் பாராட்டு

Karim
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் கோப்பையை தக்க வைத்துள்ளது. அதன் வாயிலாக 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை தொடர்ச்சியாக வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்துள்ள இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வென்று பழி தீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

- Advertisement -

ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி விமர்சித்த அந்த அணியினர் வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படுமோசமான தோல்விகளை சந்தித்தனர். மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்களை அடித்த இந்தியா அவர்களது குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி 2 போட்டிகளிலுமே உலகின் நம்பர் ஒன் அனியான ஆஸ்திரேலியாவை அசால்டாக முதல் 3 நாட்களிலேயே சுருட்டி அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, புஜாரா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் துறையில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவங்க மட்டும் இல்லனா:
இருப்பினும் இதுவரை அவர்கள் ஏமாற்றமாக செயல்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் மட்டுமே சதமடித்து அசத்தினார். ஆனால் அனைத்து நேரங்களிலும் அவர்கள் ஏற்படுத்திய பின்னடைவை அக்சர் படேல், அஷ்வின், ஜடேஜா ஆகிய மூவரும் தான் சரி செய்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் ஜடேஜா 17 விக்கெட்கள் 96 ரன்கள் எடுத்து அடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஷ்வின் 14 விக்கெட்கள் 60 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிர்பார்த்தது போலவே சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

Axar Patel Ashwin

மறுபுறம் பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் 154 ரன்கள் எடுத்த அக்சர் படேல் கேஎல் ராகுல் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட அற்புதமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 139/7 என சரிந்த இந்தியாவை அஸ்வினுடன் இணைந்த அவர் 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் அமைத்து காப்பாற்றிய பார்ட்னர்ஷிப் தான் தோல்வியிலிருந்து காப்பாற்றி இந்தியாவை வெற்றி பெற வைத்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அப்படி 3 ஸ்பின்னர்களும் ஆல்ரவுண்டராக இருப்பது இந்தியாவுக்கு வரப்பிரதாசம் என இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியாவை வெற்றி பெறுவதற்கு இந்த 3 சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் தான் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் பாராட்டியுள்ளார்.

Karim

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் 3 தரமான சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருப்பதாலேயே இந்தியா சிறந்த அணியாக திகழ்கிறது. இந்த மூவரும் குறிப்பாக சுழலுக்கு சாதகமான இந்திய துணை கண்டத்தின் மைதானங்களில் பேட்டிங்கில் மிகவும் பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அக்சர் படேல் கச்சிதமாக பேட்டிங் செய்து வெற்றியை தீர்மானிக்க கூடிய ரன்களை குவித்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவை அவங்க ஊர்லயே அடக்கி ஆள அவங்களால தான் முடியும் – நாசர் ஹுசைன் ஓப்பன்டாக்

அத்துடன் கிளன் மெக்ராத் போல ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் இந்திய ஆடுகளங்களில் செயல்பட முடியாமல் தடுமாறுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “பட் கமின்ஸ் ஒரு நல்ல பவுலிங் ஆல் ரவுண்டர். இருப்பினும் இந்திய சூழ்நிலைகளில் அவர் கட்டர் பந்துகளை வீசி மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் போல சரியான பீல்டர்களை வைத்து விக்கெட்களை எடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த அணுகுமுறையும் திட்டமும் அவரிடம் காணப்படவில்லை. மேலும் அவர் பேட்டிங்கில் எதுவும் போராடவில்லை. அவரால் தனது அணியை முன்னின்று நடத்த முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement