இந்தியாவை அவங்க ஊர்லயே அடக்கி ஆள அவங்களால தான் முடியும் – நாசர் ஹுசைன் ஓப்பன்டாக்

hussain
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனல் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட இவ்விரு அணிகளும் தங்களது பலத்தை சோதிக்கும் வாய்ப்பாக இத்தொடரில் களமிறங்கியுள்ளன. அதில் மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவாக நடைபெற்ற முதல் போட்டியில் வழக்கமான அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து 58.2 ஓவரில் 325/9 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

அதே வேகத்தில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து இறுதியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னாதாக கடந்த வருடம் இதே நியூசிலாந்து மண்ணில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் என்ன ஆனாலும் அதிரடியாக விளையாடுவோம் என்ற கண்ணோட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, இந்தியா தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிரடியான வெற்றி பெற்றது.

சவால் காத்திருக்கு:
இருப்பினும் இதே அணுகு முறையால் வெளிநாட்டு மண்ணிலும் சாதிக்க முடியுமா என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 3 – 0 (3) என்ற கணக்கில் அதே அணுகுமுறையுடன் ஒயிட் வாஷ் வெற்றி பெற்ற இங்கிலாந்து தற்போது நியூசிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து கட்டுக்கடங்காத காட்டாறு போல எதிரணிக்கு சவாலை கொடுத்து வருகிறது.

Nathan Lyon Pujara IND vs AUS

இருப்பினும் இந்த இங்கிலாந்து அணியால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியுமா என்ற மற்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு அலெஸ்டர் குக் தலைமையில் இங்கிலாந்திடம் தனது சொந்த மண்ணில் தோற்ற இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது. குறிப்பாக தற்போது உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா தற்சமயத்தில் சொந்த மண்ணில் உலகில் எந்த அணியாலும் தோற்க முடியாத முரட்டுத்தனமான அணியாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் படுமோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஆஷஸ் தொடரை தற்போதுள்ள வேகத்தில் நிச்சயம் இங்கிலாந்து வெல்லும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். ஆனால் உலகின் இதர அணிகளை தெறிக்க விடும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிப்பதே பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Nasser-1

இருப்பினும் அதில் நிச்சயமாக 2012 போல இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2001க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே தற்போதைய இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய சவால் இந்தியாவில் தான் காத்திருக்கிறது. இருப்பினும் ஆஷஸ் தொடர் நகத்தை கடிக்கும் விறுவிறுப்பானதாக இருக்கலாம். மேலும் தரமான பந்து வீச்சுக்கு எதிராக “பஸ்பால்” வேலை செய்யுமா என்று நிறைய பேர் பேசுகிறார்கள்”.

இதையும் படிங்க: இந்த டைம் அவர் தோனிக்கு சப்போர்ட்டா நிப்பாரு, சேப்பாக்கத்தில் அசத்தி கப் ஜெயிக்கிறோம் – சிஎஸ்கே பற்றி ரெய்னா ஓப்பன்டாக்

“ஆனால் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை இருக்கும் நிலைமைக்கு நிச்சயமாக ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா சராசரிக்கும் குறைவாக செயல்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் இங்கிலாந்தில் ரன்கள் அடித்தால் நிலைமை கடினமாகலாம். மேலும் இங்கிலாந்து தடுமாறிய போது சரியான நேரத்தில் வந்த மெக்கல்லம் கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவர் வருவதற்கு முன்பாக இங்கிலாந்து மிகவும் தடுமாறியது. ஆனால் மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தற்போது அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement