இந்த டைம் அவர் தோனிக்கு சப்போர்ட்டா நிப்பாரு, சேப்பாக்கத்தில் அசத்தி கப் ஜெயிக்கிறோம் – சிஎஸ்கே பற்றி ரெய்னா ஓப்பன்டாக்

Raina
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை இந்தியாவிலேயே நடைபெறும் இத்தொடரில் 10 அணிகள் மொத்தம் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. மேலும் அகமதாபாத் நகரில் துவங்கும் இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை முன்னாள் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்தது போலவே கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரிலும் தரமான வீரர்களை சரியாக வழி நடத்திய ஜாம்பவான் கேப்டன் தோனி தலைமையில் 4 கோப்பைகளை வென்றுள்ள சென்னை 2வது வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.  இருப்பினும் 39 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் தனது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் அவருக்கு உறுதுணையாக விளையாடினார்.

ஆனால் ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே 4 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை 2020க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாப தோல்வியை சந்தித்தது. அதை விட உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத காரணத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பி அந்த பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து பாதியிலேயே காயத்தால் வெளியேறினார்.

Jadeja-1

சப்போர்ட்க்கு நிப்பாரு:
போதாக்குறைக்கு ருதுராஜ் கைக்வாட் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் சுமாராக செயல்பட்டதால் கடைசியில் புள்ளி பட்டியல் 9வது இடத்தை மட்டுமே பிடித்த சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 2021 போலவே அபார கம்பேக் கொடுத்து 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இம்முறை களமிறங்கும் சென்னைக்கு ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

- Advertisement -

அதே போல் சமீபத்திய உள்ளூர் தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்ட ருதுராஜ் நல்ல பார்மில் இருக்கிறார். இவை அனைத்தையும் விட 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை களம்பிறங்குவதால் நிச்சயம் இம்முறை சென்னை பிளே ஆப் சுற்று தகுதி பெறுவது ஆரம்பத்திலேயே உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் சேப்பாக்கம் மைதானத்தில் சராசரியாக 4இல் 3 போட்டிகளை வென்று வரும் சென்னைக்கு இம்முறை தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் தோனிக்கு ரவீந்திர ஜடேஜா ஆதரவாக இருப்பார் என்பதால் நிச்சயம் இம்முறை சேப்பாக்கத்தில் சென்னை ரசிகர்களின் ஆதரவுடன் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்லும் என்று அந்த அணிக்கு உயிராக விளையாடிய சின்னத் தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் சர் ஜடேஜா பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அவர் நிச்சயமாக தோனிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பேன் என்பதை நிரூபிப்பார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் நல்ல வலுவுடன் ஃபிட்டாக இருக்கிறார்”

இதையும் படிங்க:இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடல. அதுக்குள்ளே சி.எஸ்.கேவில் இருந்து வெளியேறிய வீரர் – இதுக்கா இவரை வாங்குனீங்க?

“எனவே சேப்பாக்கத்திற்கு செல்லும் போது தோனியுடன் அவரையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதே போல் ருதுராஜ் கைக்வாட் சேப்பாக்கத்தில் முதல் முறையாக விளையாடுகிறார். மிகச் சிறந்த வீரரான அவரும் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். மேலும் தோனியும் சேப்பாக்கத்துக்கு திரும்பி ரசிகர்களுடன் விசில் போட்டு இணைந்து விளையாட மிகவும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார். எனவே இந்த சீசனை நாம் வெற்றியுடன் துவங்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார். முன்னதாக பார்மை இழந்ததால் நன்றி மறந்து கழற்றி விட்ட சென்னை நிர்வாகத்திற்கு மீண்டும் சுரேஷ் ரெய்னா ஆதரவு கொடுப்பது சென்னை ரசிகர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement