இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடல. அதுக்குள்ளே சி.எஸ்.கேவில் இருந்து வெளியேறிய வீரர் – இதுக்கா இவரை வாங்குனீங்க?

CSK Ms DHoni
Advertisement

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை தயார் செய்து பயிற்சியில் ஈடுபட வழி வகுத்து வருகின்றனர்.

CSK Matheesa Pathirana

அந்த வகையில் இந்த ஆண்டு தனது கடைசி தொடரில் விளையாட இருக்கும் தல தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் இந்த தொடரினை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து சிஎஸ்கே அணியால் புதிதாக வாங்கப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜேமிசன் அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜேமிசன் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக பெரிய தொகையில் வாங்கப்பட்டார். ஆனால் அவரது மோசமான செயல்பாடு காரணமாக பெங்களூர் அணி அவரை விடுவித்தது.

Jamieson-1

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் கையில் ஜேமிசனை ஒரு கோடி என்கிற அடிப்படை விலைக்கு அவரை சென்னை அணி வாங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்தில் விளையாடி வரும் ஜேமிசன் இந்த தொடர் முடிந்த கையோடு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளார்.

- Advertisement -

எனவே அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ஓய்வு தேவைப்படும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உண்மையிலே உங்க மனசு தங்கம் சார். விராட் கோலியின் செயலை பாராட்டி ரசிகர்கள் – பகிரும் வீடியோ இதோ

இப்படி கையில் ஜேமிசன் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக யாரை சி.எஸ்.கே அணி மாற்றுவீரராக தேர்வு செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு தற்போது

Advertisement