200 ரன்களுக்கு மேல் அடிக்க நாங்கள் போட்ட இந்த கணக்கு தான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் ஓபன்டாக்

Ruturaj
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 55-வது லீக் போட்டி டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் குவிக்க 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs DC

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியானது 117 ரன்களில் ஆல் அவுட் ஆனதால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சென்னை அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக அமைந்தது.

ஏனெனில் முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 11 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் கொடுத்த இந்த அருமையான துவக்கம் சென்னை அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது. மேலும், இந்த தொடரில் அதிக முறை 200 ரன்களை கடந்த அணியாக பார்க்கப்படும் சென்னை அணியானது புள்ளி பட்டியலில் பின்தங்கி இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

Devon Conway

இந்நிலையில் இந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்தது குறித்து அந்த அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது போல் தெரிந்தது. ஆனால் நேரம் போகப்போக மைதானத்தில் தொய்வு ஏற்படும் என்று நினைத்தோம்.

- Advertisement -

அந்த வகையில் நேரம் போக போக பந்து மெதுவாக வந்தது. ஆனாலும் நாங்கள் முன்கூட்டியே சிறப்பாக அதிரடியான ஆட்டத்தை விளையாடி விட்டோம் அது எங்களுக்கு சிறப்பான பலனை அளித்தது. கான்வே மிகவும் அற்புதமாக ஆடினார். நாங்கள் ஏற்படுத்திய நல்லது துவக்கமானது 200 ரன்களை தாண்டி செல்ல உதவியது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு தமிழக வீரரான இவரை அனுப்புங்க. என்னமா ஆடுறாரு – மைக்கல் வாகன் பதிவு

அதோடு மட்டுமின்றி டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை முதல் பந்தில் இருந்தே அடித்து நெருக்கடி கொடுக்க முயற்சித்தோம். அந்த வகையில் துவக்கத்திலேயே அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததால் எங்களால் பிரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடிந்தது என்று ருதுராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement