டி20 உலககோப்பைக்கு தமிழக வீரரான இவரை அனுப்புங்க. என்னமா ஆடுறாரு – மைக்கல் வாகன் பதிவு

Vaughan
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நெருங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் தங்களது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் பலரும் தங்களது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பார்மை இழந்து திண்டாடிய பவுலர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.

karthik

- Advertisement -

அதோடு மட்டுமின்றி இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று உள்ளதால் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து ஒன்றாக அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஏற்கனவே கொல்கத்தா அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அவர் அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தான் மீண்டும் நிச்சயம் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று சபதம் ஏற்று தற்போது ஐபிஎல் தொடரில் தனது பிரமாதமான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தி வருகிறார்.

அதன்படி இன்று நடைபெற்று முடிந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட 8 பந்துகளை சந்தித்த அவர் 30 ரன்களை அடித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த தொடர் முழுவதுமே 200+ ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இன்றும் தனது அற்புதமான பினிஷிங் திறனை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக புகழ்ந்துள்ளார். மேலும் அதில் அவர் பதிவிட்டதாவது:

இதையும் படிங்க : சரியான திட்டத்துடன் எளிதாக சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு – என்ன நடந்தது ?

தினேஷ் கார்த்திக் நிச்சயம் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியா பறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிலாக வழங்கி வருகின்றனர்.

Advertisement