ருதுராஜ் எடுத்துள்ள தவறான முடிவால் தான் சென்னை அணி தோல்வியை சந்திக்கிறதா? – வெளியான தகவல்

CSK-Captain
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ன்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிஎஸ்கே அடைந்த தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த சில தவறான முடிவுகளே காரணம் என்றும் இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்திக்க அது வழி வகுக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

- Advertisement -

இந்த சீசனில் சென்னை அணி பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும். இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமே ருதுராஜ் கெய்க்வாட்டின் தவறான கணிப்புகள் தான். ஏனெனில் பேட்டிங்கின் போது பவர்பிளே ஓவர்களில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வந்தனர்.

ஆனால் கடந்த சில போட்டிகளாக ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடி வருகிறார். அவருக்கு பதிலாக ரகானே துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இப்படி ரகானே மற்றும் ரச்சின் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி வரும்போது பவர் பிளேவிற்குள் சிஎஸ்கே அணி குறைந்தது இரண்டு விக்கெட்டுகளை இழந்து விடுகிறது. அப்படி சரிவினை சந்திக்கும் போது ஷிவம் துபே களத்திற்கு வருவதால் அவரும் எதிர் முன்னிலையில் நின்று அட்டாக் செய்து விளையாடுகிறார்.

- Advertisement -

அப்படி அட்டாக் செய்து விளையாடும் போது அவரது விக்கெட்டையும் எளிதாக இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக விரைவாக இம்பாக்ட் பிளேயர் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் தோனி பின்வரிசையிலேயே விளையாடுவதால் அவரும் முன்கூட்டியே களமிறங்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதனால் சென்னை அணியில் ஷர்துல் தாகூரும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க முடியாமல் போகிறது.

இதையும் படிங்க : தோனி பரிசளித்த பந்தை.. இந்தியாவுக்காக விளையாடி அவங்களுக்கு கொடுப்பேன்.. லட்சியத்துடன் பேசிய குழந்தை

இப்படி சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் ஏற்படும் மாற்றங்களே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் கூட ரவீந்திர ஜடேஜா நான்காவது வீரராக முன்கூட்டியே களமிறங்கினார். இப்படி தேவையில்லாத பேட்டிங் மாற்றங்கள் பல நிகழ்வதால் சென்னை அணி சரிவை சந்திக்கிறது. அதோடு தீபக் சாஹரால் பவர்பிளவில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போகும் பட்சத்தில் சென்னை அணி பந்து வீச்சிலும் பெரிய சிக்கலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement