தோனி பரிசளித்த பந்தை.. இந்தியாவுக்காக விளையாடி அவங்களுக்கு கொடுப்பேன்.. லட்சியத்துடன் பேசிய குழந்தை

Dhoni Fan Meher
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் எம்.எஸ். தோனி மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் 2019இல் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அங்கேயும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார். மேலும் 42 வயதை தாண்டி விட்டதால் 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் எப்போது களத்திற்கு வருவார் என்பதை பார்க்க ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

க்யூட் குழந்தை:
அப்படி தோனி பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம் 120 – 125 டெசிபல் சத்தத்தில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வரவேற்புக்கு மத்தியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 36* (17) ரன்கள் விளாசிய தோனி மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சருடன் 20* ரன்களை குவித்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 2011 உலகக் கோப்பை ஃபைனல் போல அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

கடைசியில் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் மும்பையை தோற்கடித்து சென்னை வென்றது. அதை விட அப்போட்டியில் ஃபினிஷிங் செய்து விட்டு பெவிலியன் நோக்கி திரும்பிய தோனி படிக்கட்டில் ஒரு பந்து கிடப்பதை பார்த்தார். அப்போது போகிற போக்கில் அதை குனிந்து எடுத்த அவர் அங்கிருந்த ஒரு குட்டி பெண் ரசிகைக்கு பரிசாக கொடுத்து விட்டு சென்றது மற்ற அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

இந்நிலையில் மெஹர் எனும் அந்த சிறிய பெண் குழந்தை வருங்காலத்தில் தாமும் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தோனி போலவே சிக்ஸர் அடித்து அந்த பந்தை தம்மை போன்ற இளம் ரசிகருக்கு கொடுப்பேன் என்றும் மெஹர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஜோடியாக சிக்கிய லக்னோ – சிஎஸ்கே கேப்டன்கள்.. ருதுராஜ், கேஎல் ராகுல் பெற்ற ஒரே தண்டனை

“என் பெயர் மெஹர். எனக்கு தோனி அன்கிள் இந்த பந்தை கொடுத்தார். நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடி எனது கனவை நிஜமாக்கி இந்த பந்தை ஒருவருக்கு கொடுப்பேன்” என்று க்யூட்டாக கூறினார். அப்படி பல ரசிகர்களுக்கு ரோல் மாடலாக திகழும் தோனி நேற்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தாலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 28* (9) ரன்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement