ஜோடியாக சிக்கிய லக்னோ – சிஎஸ்கே கேப்டன்கள்.. ருதுராஜ், கேஎல் ராகுல் பெற்ற ஒரே தண்டனை

LSG vs CSK 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை போராடி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57*, ரகானே 36, மொயின் அலி 30, எம்எஸ் தோனி 28* ரன்கள் எடுத்தனர். ஆனால் அதை துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 82, குவிண்டன் டீ காக் 54 ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 7 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

ஜோடியாக தண்டனை:
மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்கள் கூட அடிக்காமல் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட சென்னை 7 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் சென்னைக்கு எதிரான இப்போட்டியில் முதலில் பந்து வீசிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக அறிவிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி முதல் முறையாக இந்த தவறை செய்துள்ளது. எனவே முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு மட்டும் அபராதம் மிதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அதே போல லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

- Advertisement -

அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட்’க்கு இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியும் இந்த சீசனில் இப்போட்டியில் தான் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே முதல் தவறு என்பதால் கேப்டன் ருதுராஜ்க்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தோனி இந்தியாவின் நேஷ்னல் ஹீரோ.. லாராவை பாத்ததில்லை.. இதை என் பேரன்கிட்ட சொல்வேன்.. பூரான் பேட்டி

இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்தப் போட்டியில் இதே லக்னோ அணியை ஏப்ரல் 23ம் தேதி எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் லக்னோவை தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை எதிர்கொள்கிறது. எனவே அந்தப் போட்டியிலாவது லக்னோவை தோற்கடித்து சென்னை வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement