தோனி இந்தியாவின் நேஷ்னல் ஹீரோ.. லாராவை பாத்ததில்லை.. இதை என் பேரன்கிட்ட சொல்வேன்.. பூரான் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற 34வது லீக் போட்டியில் சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரவீந்திர ஜடேஜா 57*, ரஹானே 36, மொய்ன் அலி 30 ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த லக்னோவுக்கு குயிண்டன் டீ காக் 54, கே எல் ராகுல் 82 ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் இப்போட்டியில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஜாம்பவான் தோனியின் ஆட்டம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் கடைசி 2 ஓவரில் களமிறங்கிய அவர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 2வது பந்தில் கீப்பர் தலைக்கு மேல் சிக்சரை பறக்க விட்டு அசத்தினார்.

- Advertisement -

நேஷ்னல் ஹீரோ:
அந்த வகையில் 28* (9) ரன்களை 311.11 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து வயதானாலும் தன்னுடைய ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். அதை விட 3 விதமான ஐசிசி கோப்பைகளை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்ததால் சென்னையை தாண்டி மும்பை, ஹைதராபாத் அனைத்து நகரங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போட்டியில் சேப்பாக்கமா அல்லது லக்னோவா என்று யோசிக்கும் அளவுக்கு தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து ஆதரவு கொடுத்தனர். அத்துடன் தோனி பேட்டிங் செய்ய வந்த போது 124 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ரசிகர்கள் உச்சகட்ட ஆரவாரம் செய்து வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் எம்எஸ் தோனி இந்தியாவின் நெஷ்னல் ஹீரோ என்று லக்னோவுக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் வியப்புடன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டி முடிந்ததும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சீசன் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தோனி பேட்டிங் செய்ய வரும் போது களத்திலும் களத்திற்கு வெளியேயும் மஞ்சள் கடல் பெருகியிருக்கும். அதை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு நேஷனல் ஹீரோ. பிரைன் லாரா விளையாடிய காலகட்டத்தில் நாங்கள் விளையாடவில்லை”

இதையும் படிங்க: நம்ம டீம் சி.எஸ்.கே-ல ஒரேயொரு வீக்னஸ் இருக்கு.. அதை சரி பண்ணியே ஆகனும் – தோல்விக்கு போன் ருதுராஜ் பேச்சு

“நாங்கள் ஒவ்வொருவரும் பிரைன் லாராவின் பெரிய ரசிகர்கள். ஆனால் தற்போது அதைப் போன்ற ஒன்றைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. தோனியுடன் களத்தில் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவருடன் களத்தை பகிர்ந்து கொண்ட இந்த தருணங்களை எங்களுடைய குழந்தை மற்றும் பேரக்குழந்தையிடம் சொல்வோம்” என்று கூறினார். முன்னதாக தோனி உலகிலேயே அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டர் என்று மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் சமீபத்தில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement