நம்ம டீம் சி.எஸ்.கே-ல ஒரேயொரு வீக்னஸ் இருக்கு.. அதை சரி பண்ணியே ஆகனும் – தோல்விக்கு போன் ருதுராஜ் பேச்சு

Gaikwad
- Advertisement -

லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 176 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. மேலும் லக்நா அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் எளிதாக ரன்களை வழங்கியதும் அதிருப்தியை அளித்தது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் வெளி மண்ணில் நடைபெறும் போட்டிகளில் தொடர்ந்து சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்து வருவது இனிவரும் நாட்களில் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே அணியில் இருக்கும் ஒரு முக்கிய குறையை வெளிப்படுத்தி தனது ஆதங்கத்தையும் தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் கூறுகையில் : தற்போதைய சிஎஸ்கே அணியில் ஒரு ஏரியா மட்டும் முன்னேற்றம் காண வேண்டிய மிகப்பெரிய அவசியம் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாங்கள் பவர் பிளேவின் போது விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியமான ஒன்று. பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் எதிரணிக்கு அழுத்தத்தை தர முடியும். நடப்பு ஐபிஎல் தொடரில் நமது அணியின் பவுலர்களால் பெரிய அளவில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. எனவே அந்த விடயத்தில் நாங்கள் அதிகமாக உழைப்பினை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : விளையாடுனது தோனியா? இல்ல டிவில்லியர்ஸ்ஸா? லக்னோ மைதானத்தில் ரசிகர்களை குஷியாக்கிய தல தோனி

அவர் கூறியது போலவே ஆரம்பகட்ட ஓவர்களில் விக்கெட்டை எடுக்கும் போட்டிகளில் எளிதாக வெற்றி பெறும் சென்னை அணி பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தாத போது கடினப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் கூட 15 ஆவது ஓவரில் அதுவும் 134 ரன்களை விட்டுக்கொடுத்த பின்னர் தான் முதல் விக்கெட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement