விளையாடுனது தோனியா? இல்ல டிவில்லியர்ஸ்ஸா? லக்னோ மைதானத்தில் ரசிகர்களை குஷியாக்கிய தல தோனி

Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தாலும் சென்னை அணி சார்பாக விளையாடியிருந்த மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது போட்டியின் ஆரம்பத்திலேயே ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் ரஹானே மற்றும் ருதுராஜி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை துவங்கி இருந்தாலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே சென்னை அணி சிக்கலில் சிக்கியது.

- Advertisement -

பின்னர் ஒருபுறம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடிக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய மொயின் அலியும் சிறிது அதிரடி காட்ட சென்னை அணி படிப்படியாக சரிவில் இருந்து மீண்டது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் 160 ரன்களையாவது சென்னை அணி தொடுமா? என்று சந்தேகம் இருந்தது.

அவ்வேளையில் மொயின் அலி ஆட்டமிழந்த பிறகு தோனி எட்டாவது வீரராக களமிறங்கினார். 124 டெசிபல் சத்தத்துடன் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புக்கு இடையே களமிறங்கிய தோனி அவர்களின் வரவேற்பினை பொய்யாக்காமல் அதிரடியை காட்டி ரசிகர்களை மிரளவைத்தார். குறிப்பாக முதல் பந்தில் சிங்கிள் எடுத்த தோனி அடுத்து சந்தித்த இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் மூன்றாவது சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். இந்த போட்டியில் மொத்தமாக 9 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 311 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 28 ரன்கள் குவித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் தோனி விளையாடிய ஆட்டம் ரசிகர்களை ரசிக்க வைத்ததோடு சேர்த்து ஏ.பி.டி-யை ஞாபகப்படுத்தும் வகையிலும் இருந்தது.

இதையும் படிங்க : தோனி உள்ள வந்து எல்லாத்தையும் மாத்திட்டாரு.. இருந்தாலும் நல்லா ஆடி தப்பிச்சிட்டோம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

ஏனெனில் மோஷின் கான் வீசிய 18-வது ஓவரில் ஆப் சைடில் வந்த பந்தினை நகர்ந்து வந்து கீப்பரின் தலைக்கு மேல் சிக்சராக தூக்கி விளாசினார். அதோடு மட்டுமின்றி 20-தாவது ஓவரில் யாஷ் தாக்கூர் பந்தில் ஸ்லாட்டில் விழுந்த பந்தை 101 மீட்டரு விரட்டி அசத்தினார். இப்படி அதிரடியில் அசத்திய தோனி முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பிளேயர் என்ற சாதனையும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement