அடுத்த மேட்ச் தான் உங்களுக்கு லாஸ்ட். கெடு விதித்த சி.எஸ்.கே – அணியை விட்டு விலக தயார் (இளம்வீரர் முடிவு)

Ruturaj
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களின் அடிப்படையில் சிறந்த அணியாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளதனால் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில காரணங்கள் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.

CSK

- Advertisement -

அதன்படி தீபக் சாகர் அணியில் இல்லாதது, பவுலிங்கில் அனுபவம் அற்ற வீரர்கள் இடம் பிடித்திருப்பது, அதுதவிர ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பேட்டிங் பார்ம் என இந்த தொடர் தோல்விகளுக்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக துவக்க வீரரான கெய்க்வாட் முதல் மூன்று போட்டிகளிலும் முறையே 0,1,1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து நான்காவது போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இப்படி தொடர்ச்சியாக இவர் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து அணி நிர்வாகம் வைத்த மீட்டிங்கில் கெய்க்வாட்டிடம் தோனி வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Ruturaj Gaikwad

மேலும் அடுத்து பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும் அதன் பின்னர் அதிலும் நீங்கள் சொதப்பினால் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு அந்த மீட்டிங்கில் கெய்க்வாட்டும் அணிக்கு தேவை என்றால் நான் விலகவும் தயார். என்னுடைய இடத்தில் வேறு ஒருவர் இறங்குவதில் எனக்கு எந்த பிரச்சனை கிடையாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நான் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை நீக்கி விடுங்கள் என்று நேரடியாக பதில் அளித்திருக்கிறார். இதன் காரணமாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி தான் கெய்க்வாட்டிற்கு கிட்டத்தட்ட கடைசி வாய்ப்பு போன்றது. இதே போன்று அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஆரம்ப சில போட்டிகளில் சற்று சிக்கலை சந்தித்தாலும் அதன் பிறகு மீண்டு வந்து சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால் நிச்சயம் ருதுராஜ் பழைய பாம்பிற்கு வந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னர்! புதிய சாதனை படைத்த ஸ்டார் வீரருக்கு குவியும் பாராட்டு – விவரம் இதோ

அதே போன்று தற்போது வலைப்பயிற்சியில் கூடுதலாக நேரத்தைச் செலவிட்டு பயிற்சியை மேற்கொண்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் சிறப்பாகவே உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement