இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னர்! புதிய சாதனை படைத்த ஸ்டார் வீரருக்கு குவியும் பாராட்டு – விவரம் இதோ

Chahal RR
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 10-ஆம் தேதி நடந்த 20-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அப்போட்டியில் ராஜஸ்தான் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து திரில் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165/6 ரன்கள் குவித்தது.

Ashwin

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் 36 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உட்பட அதிரடியாக 59* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நல்ல பினிஷிங் கொடுத்தார். அவருடன் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 28 (23) ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கெளதம் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

முதலிடத்தில் ராஜஸ்தான்:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய லக்னோவிற்கு முதல் ஓவரை வீசிய அந்த அணி அதிரடி வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் கௌதம் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார். இதனால் 1/2 என மோசமான தொடக்கத்தைப் பற்றி லக்னோவுக்கு ஜேசன் ஹோல்டர் 8 (14), தீபக் ஹூடா 25 (24), ஆயுஷ் படோனி 5 (7) என மிடில் ஆடர் வீரர்கள் சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 39 (32) ரன்களை எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Marcus Stoinis

இதனால் 101/6 என திண்டாடிய லக்னோவின் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 38* ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு போராடினார். குறிப்பாக வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதில் தலா 1 பவுண்டரி மற்றும் சிக்சர்களை ஸ்டோனிஸ் பறக்கவிட்ட போதிலும் 20 ஓவர்களில் 162/8 ரன்களை மட்டுமே எடுத்த லக்னோ பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியால் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ஜொலிக்கிறது.

- Advertisement -

கலக்கும் சஹால்:
இந்த வெற்றியில் 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய யூஸ்வென்ற சஹால் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இது மட்டுமல்லாமல் இந்த வருடம் இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 6.50 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக அதற்காக வழங்கப்படும் கௌரவ ஊதா நிற தொப்பியையும் அவர் தற்போது தன் வசம் வைத்துள்ளார்.

chahal

அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 2013 – 2021 வரை இதே போலவே பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் பல வெற்றிகளில் பங்காற்றினார். ஆனாலும் அவரை அந்த அணி நிர்வாகம் கழற்றிவிட்டதை பயன்படுத்திய ராஜஸ்தான் 6.5 கோடி என்ற பெரிய தொகைக்கு நம்பி வாங்கியது. அதற்கேற்றார் போல் சிறப்பாக செயல்பட்டு வரும் சஹால் தன்மீது ராஜஸ்தான் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக வெற்றிகளைத் தேடி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

புதிய சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்துகளை கடந்து அதிக விக்கெட்டுகளை எடுத்த 5-வது பந்துவீச்சாளர் என்ற முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:

Chahal RR Sanju Samson

1. ட்வயன் ப்ராவோ : 173 விக்கெட்டுகள்
2. லசித் மலிங்கா : 170 விக்கெட்கள்
3. அமித் மிஸ்ரா : 166 விக்கெட்கள்
4. பியூஸ் சாவ்லா : 157 விக்கெட்கள்
5. யூஸ்வென்ற சஹால்/ஹர்பஜன் சிங் : 150 விக்கெட்கள்

- Advertisement -

இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் சஹால் பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியது பின்வருமாறு. “சஹால் போன்ற ஒருவரிடம் 1 முதல் 20-வது ஓவர் வரை போட்டியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நம்பி பந்தை வழங்கலாம். தற்போதைய இந்திய கிரிக்கெட்டை நீங்கள் பார்க்கும் போது அவர் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக வலம் வருகிறார்” என்று மனதார பாராட்டினார்.

இதையும் படிங்க : அஸ்வின் எடுத்த ரிட்டயர்டு அவுட் விதிமுறை என்றால் என்ன? – ஐ.பி.எல் ரூல்ஸ் சொல்வது என்ன?

அவர் கூறுவது போல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்கு பின் சஹால் உண்மையாகவே ஒரு தரமான லெக் ஸ்பின்னராக தன்னை நிரூபித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement