கே.எல் ராகுலின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

Ruturaj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 09-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இத்தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அனுபவம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை இந்த இளம் அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

INDvsRSA toss

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். இதில் துவக்க வீரரான ராகுல் காயம் காரணமாக வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அதே வேளையில் சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இது ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்.

ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேவேளையில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

ruturaj

இதன் காரணமாக இந்த தொடரிலும் முதன்மை துவக்க வீரராக ராகுலுடன் இஷான் கிஷனே விளையாடுவார் என்பதனால் ருதுராஜ் கெய்க்வாட் பெரும்பாலும் பெஞ்சிலேயே அமர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதால் ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரே இந்த டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

ஒருபுறம் வாய்ப்பே கிடைக்காமல் வெளியில் அமர்ந்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இம்முறை ராகுலின் காயத்தினால் ஒரு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்று கூறலாம். சென்னை அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ முதல் டி20 ! எதில் பார்க்கலாம், போட்டி நடக்கும் டெல்லி மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

இருப்பினும் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement