இந்தியா – தெ.ஆ முதல் டி20 ! எதில் பார்க்கலாம், போட்டி நடக்கும் டெல்லி மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Delhi Cricket Stadium
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் காயத்தால் விலகினார். எனவே ரிஷப் பண்ட் தலைமையில் ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது.

குறிப்பாக கேப்டனாகவும் ஆல்ரவுண்டராகவும் அசத்தி கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா, பெங்களூர் அணியில் சொல்லி அடித்த தினேஷ் கார்த்திக் போன்ற நட்சத்திரங்கள் நீண்ட நாட்களுக்குப் பின் இந்தியாவுக்காக இந்த தொடரில் விளையாடுகின்றனர். அவர்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதே போல் தெம்பா பவுமா தலைமையில் இதே ஐபிஎல் தொடரில் மிரட்டிய டேவிட் மில்லர், குயின்டன் டி காக், ககிசோ ரபாடா போன்ற நட்சத்திர தரமான வீரர்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

டெல்லி மைதானம்:
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தருணத்தில் பெரோசா கோட்லா என்று அழைக்கப்பட்ட இம்மைதானத்தை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம்.

- Advertisement -

1. தலைநகரம் டெல்லியில் கடந்த 1948 முதல் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகள் எடுத்தது உட்பட பல சரித்திரம் வாய்ந்த சர்வதேச போட்டிகளை கண்ட இந்த மைதானம் 41,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2. இந்த தொடரில் வரலாற்றில் 6 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகள் 3 போட்டிகளிலும் வென்றுள்ளன.

- Advertisement -

3. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் 1 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. கடந்த 2017இல் முதல் முறையாக இந்த மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தலா 80 ரன்கள் எடுத்து அதிரடியாக பேட்டிங் செய்ததால் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

4. கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இருப்பினும் இம்முறை இந்த மைதானத்தில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் டெல்லி நகரில் தற்போது வெப்பமான கால சூழ்நிலைகள் நிலவுவதால் இந்தப் போட்டி மழையால் தடைபடுவதற்கான வாய்ப்பு கொஞ்சம்கூட இல்லை. மேலும் போட்டி நாளன்று சராசரியாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
பொதுவாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் காணப்படும் பிட்ச் மெதுவாக இருப்பதால் சுழல் பந்து வீச்சுக்கு அதிகமாக கொடுப்பதாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த மைதானத்தின் பவுண்டரிகள் அளவில் சற்று சிறியது என்பதாலும் உள்வட்டதுக்கு வெளியே பந்து அதிவேகமாக பவுண்டரியை வெளியைத் தொடுவதற்கு செல்லும் என்பதாலும் அதை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தினால் அதிரடியாக ரன்களை எளிதாக சேர்க்கலாம்.

மேலும் இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் பவர்பிளே ஓவர்களில் கிடைக்கும் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் கிடைக்கலாம். அத்துடன் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 ஆகும். இதற்கு முன் இங்கு நடைபெற்ற 6 போட்டிகளில் தலா 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது 170 ரன்கள் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம். இருப்பினும் இது இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சேசிங் செய்தாலும் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் அணியில் இருந்து வெளியேற்றம் – என்னப்பா இதெல்லாம்

எதில் பார்க்கலாம்:
இந்த தொடர் முழுவதையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு கொள்ளலாம். அதேபோல் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாகவும் இலவசமாக பார்க்க முடியும்.

Advertisement