கே.எல் ராகுலை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் அணியில் இருந்து வெளியேற்றம் – என்னப்பா இதெல்லாம்

ind
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய 15 ஆவது ஐ.பி.எல் தொடரானது மே மாதம் இறுதியில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 9-ஆம் தேதி துவங்கி ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Rahul-1

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐ.பி.எல் தொடரில் கலக்கிய இளம் வீரர்கள் பலருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த வேளையில் இன்று இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த கே.எல் ராகுல் காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக அணியில் இருந்து வெளியேறிய வெளியேறினார் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் காரணமாக இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

Kuldeep Yadhav vs KKR 2.jpeg

மேலும் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ஒருபுறம் நாளை போட்டி துவங்க இருந்த வேளையில் இன்று காயம் காரணமாக கே.எல் ராகுல் வெளியேறிய நிலையில் அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் பார்ம் அவுட் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த குல்தீப் யாதவ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தியதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதையும் படிங்க : காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து திடீரென விலகிய கே.எல் ராகுல் – புதிய கேப்டன் அறிவிப்பு

இந்நிலையில் இன்று அவரும் காயமடைந்து தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்த அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement