காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து திடீரென விலகிய கே.எல் ராகுல் – புதிய கேப்டன் அறிவிப்பு

Rahul-1
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களையும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

INDvsRSA toss

அதன்படி பிசிசிஐ வெளியிட்டிருந்த இந்த அணியில் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடிவரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இளம்வீரரான கே.எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ராகுல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Rahul

ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென காயம் காரணமாக விலகியுள்ளார் என்பதனால் தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றிருக்கும் இந்திய அணியானது நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் 13 ஆவது வெற்றியை தொடர்ச்சியாக பெற்று வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 71வது சதம் பொறுமையா வரும் ஆனால் இரட்டை சதமடித்து உலகசாதனை படைத்த விராட் கோலி – முழுவிவரம்

தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் துவக்க ஆட்டக்காரருமான கே.எல் ராகுல் அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படக்கூடிய மாற்றத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement