- Advertisement -
ஐ.பி.எல்

எங்களுடைய இந்த அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுமட்டும் தான்.. முதல் வெற்றிக்கு பிறகு – ருதுராஜ் மகிழ்ச்சி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் : ருதுராஜ் கெய்க்வாட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 115 ரன்களையும், ஆயுஷ் மாத்ரே 59 ரன்களையும் குவித்தனர். பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது :

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சி.எஸ்.கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 60 ரன்களையும், நிசாங்கா 41 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :

உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற பின்னர் இங்கு வந்து பேசும்போது நிறைவாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த ஆட்டத்தில் 200 – 210 ரன்கள் வரை அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். ஏனெனில் மைதானம் சற்று ஸ்லோவாக இருந்ததால் நிச்சயம் இந்த ரன்கள் போதும் என்று நினைத்தோம். அந்த வகையிலேயே எங்களுடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எந்த பவுலர்ன்னு பாக்க மாட்டேன்.. என்னோட டார்கெட் இதுமட்டும் தான் – ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்சி பேட்டி

சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். ஆயுஷ் மாத்ரேவும் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மிக முக்கியமான காரணமே பந்து வீச்சாளர்கள் தான். ஏனெனில் எங்களது பவுலர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை போட்டியில் வெளிப்படுத்தி திட்டங்களுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் முழுக்க முழுக்க வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் மட்டும் தான் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -