ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று கௌகாத்தி நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் விளையாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
பேட்டிங்கில் என்னுடைய பிளான் இதுதான் : வைபவ் சூர்யவன்ஷி
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 81 ரன்களை குவித்திருந்தார்.
ஆனாலும் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 78 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 26 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 300 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 78 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை அளித்ததால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய வைபவ் சூர்யவன்சி கூறியதாவது :
வலைப்பயிற்சியில் நான் எவ்வாறு விளையாடுகிறேனோ அதையே போட்டியிலும் விளையாட முயற்சிக்கிறேன். என்னுடைய இயல்பான ஆட்டத்திலிருந்து வேறு ஏதும் கூடுதலாக நான் மைதானத்தில் முயற்சி செய்து பார்ப்பது கிடையாது. பும்ரா மற்றும் ஹேசல்வுட் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடும் போது பந்துவீச்சாளர்களை பார்க்க மாட்டேன். அவர்கள் வீசும் பந்து எங்கிருக்கிறது? என்பதை மட்டும் தான் கவனிப்பேன்.
பந்துவீச்சாளர்களை பார்க்காமல் பந்தினை பார்த்து அடிப்பது மட்டும்தான் என்னுடைய டார்கெட். அந்த வகையில் நான் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறேன். என்னுடைய அப்பா மற்றும் என்னுடைய கார்டியன் ஆகிய இருவரும் என்னிடம் கூறுவது ஒரே விடயம் தான். தற்போது நான் மிகவும் இளம் வயதில் இருக்கிறேன் இது எனக்கு வெறும் துவக்கம் மட்டுமே. இனிவரும் ஆட்டங்களில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் வேறு எதையும் யோசிக்க கூடாது என்று கூறுவார்கள்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் நாங்க தோல்வியை சந்திக்க அந்த பையனோட ஆட்டம் தான் காரணம் – ரஜத் பட்டிதார் பேட்டி
நான் அதை மட்டுமே மனதில் வைத்து என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த போட்டியில் நான் இன்னும் சிறிது நேரம் விளையாடி இருந்தால் 10 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க முடியும். ஆனால் விரைவாக ஆட்டமிழந்தது சற்று ஏமாற்றம் அளிக்கிறது என்றும் வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.



