இந்த போட்டியில் நாங்க தோல்வியை சந்திக்க அந்த பையனோட ஆட்டம் தான் காரணம் – ரஜத் பட்டிதார் பேட்டி

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியானது நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்வி குறித்து : ரஜத் பட்டிதார் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 63 ரன்களையும், விராட் கோலி 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 18 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 81 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 78 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்த பின்னர் தங்களது தோல்வி குறித்து பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் பவர்பிளேவில் அதிரடியாக ஆரம்பித்தாலும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆனாலும் அதிலிருந்து மீண்டு 202 ரன்கள் வரை வந்தது ஒரு நல்ல பாசிட்டிவ்வான விடயமாக பார்க்கிறேன்.

அதேபோன்று எங்கள் அணியை போலவே ராஜஸ்தான் வீரர்களும் பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிலும் குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி பவர்பிளே ஓவர்களில் விளையாடிய விதம் மிகப்பெரிய வித்தியாசத்தை இந்த போட்டியில் ஏற்படுத்தியது. அந்த இன்னிங்ஸ் எங்களது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தியது சரியான ஒரு முடிவு தான் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனித்துவமான சாதனை நிகழ்த்திய வீரராக – ரோஹித் சர்மா மாபெரும் சாதனை

ஏனெனில் வெங்கடேஷ் ஐயர், ரோமாரியோ ஷெப்பர்டு, க்ருனால் பாண்டியா ஆகியோரால் பந்துவீச முடியும் என்பதனாலே சுயாஷ் சர்மாவை எடுக்காமல் வெங்கடேஷ் ஐயரை இம்பேக்ட் வீரராக கொண்டு வந்தோம். இந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் வெற்றிகரமாக திரும்பவும் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement