டெல்லி அணிக்கெதிராக நாங்க தோக்க உண்மையிலேயே இதுதான் காரணம்..வெளிப்படையாக ஒப்புக்கொண்ட – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் காரணமாக டெல்லி அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் உண்மையிலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி இருந்தனர். குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்கு பிறகு மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை 191 ரன்களில் நிறுத்தியது சிறப்பான ஒன்று.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸை விட இரண்டாவதாக நாங்கள் விளையாடிய போது பவுன்ஸ் மற்றும் சீம் மூமென்ட் ஆகியவை இருந்தது. அதனை கணிக்க முடியாமல் தான் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். முதல் 3 ஓவர்களை பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை. அதுதான் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

இதையும் படிங்க : 20வது ஓவரில் 20 ரன்ஸ்.. 42 வயதிலும் பட்டைய கிளப்பிய தல தோனி.. ரோஹித்தை முந்தி மாஸ் சாதனை

முதல் பாதி முடிந்ததும் நாங்கள் இலக்கினை எட்டிவிடுவோம் என்றே நினைத்தோம். ஆனால் நான் கூறியபடி மைதானத்தில் இருந்த எக்ஸ்டரா பவுன்ஸ் காரணமாக ரன்கள் வர கடினமாக இருந்தது. அதோடு மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை மெயின்டெய்ன் செய்யமுடியாமல் போனது. இடையில் ரன் ரேட்டை குறைக்கும் அளவிற்கு ஒரு பெரிய ஓவர் (ரன்கள்) கிடைக்காமல் போனது என தோல்விக்கான காரணங்களை ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement