20வது ஓவரில் 20 ரன்ஸ்.. 42 வயதிலும் பட்டைய கிளப்பிய தல தோனி.. ரோஹித்தை முந்தி மாஸ் சாதனை

MS Dhoni 20
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி முதல் வெற்றியை பதிவு செய்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 191/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரித்வி ஷா 43, டேவிட் வார்னர் 52, கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 193 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2 (12) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றி பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனியின் சாதனை:
ஏனெனில் அதனால் 7/2 என தடுமாறிய சென்னைக்கு ரகானே 45 (30), டேரில் மிட்சேல் 34 (26) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினர். அதற்கிடையே சமீர் ரிஸ்வி கோல்டன் டக் அவுட்டானார். அதனால் கடைசியில் சிவம் துபே 18, ரவீந்திர ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* (16) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை இந்த சீசனில் முதல் தோல்வியை பதிவு செய்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னை வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் எம்எஸ் தோனி இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார். மேலும் 42 வயதாகிவிட்டதால் 8வது இடத்தில் களமிறங்கும் அவர் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அதனால் இந்த போட்டியில் பேட்டிங் செய்ய வந்த போது 128 டெசிபல் சத்தத்தில் விசாகப்பட்டினம் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தோனிக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்களை ஏமாற்றாத தோனி 1 வருடம் கழித்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி பறிபோனாலும் கூட 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இதையும் படிங்க: ஆட்டநாயகன் வெல்ல அது தான் ஹெல்ப் பண்ணுச்சு.. என்னோட லட்சியமே இந்தியாவுக்கு ஆடணும்.. கலீல் பேட்டி

குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4, 6, 0, 4, 0, 6 என 20 ரன்கள் அடித்த தோனி தன்னுடைய கேரியரில் 9வது முறையாக ஒரு ஓவரில் 20க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு ஓவரில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா 8 முறை ஒரு ஓவரில் 20+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் 3வது இடத்தில் ரிஷப் பண்ட் (6), 4வது இடத்தில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹரிதிக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (தலா 5) உள்ளனர்.

Advertisement