இதுக்காக தோனி 2 வருஷமா பிளான் பண்ணாரு.. சிஎஸ்கே கலாச்சாரத்தை மாற்ற மாட்டேன்.. ருதுராஜ் பேட்டி

Ruturaj gaikwad csk
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக 2022 சீசனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை எம்எஸ் தோனி நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

ஆனால் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறிய ஜடேஜா தலைமையில் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை கடைசியில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து மீண்டும் பொறுப்பை வாங்கிக் கொண்ட தோனி 2023 சீசனில் 5வது கோப்பையை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க உதவினார்.

- Advertisement -

2022இல் துவங்கிய திட்டம்:
இருப்பினும் தற்போது 42 வயதை தாண்டி விட்டதால் மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் தோனி ஒப்படைத்துள்ளார். ஆனால் இம்முறை தோனியின் கணக்கு தப்பவில்லை என்பது போல் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022இல் ஏற்பட்ட தவறு மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக அடுத்த சிஎஸ்கே கேப்டன் நீங்கள் தான் என்று தோனி தம்மிடம் தெரிவித்ததாக ருதுராஜ் கூறியுள்ளார்.

எனவே இந்த பதவி தமக்கு ஆச்சரியமில்லை என்று தெரிவிக்கும் அவர் தோனி உருவாக்கிய எதையும் மாற்றாமல் சிஎஸ்கே அணியின் வெற்றி கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி ருதுராஜ் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அடுத்த வருடம் நீங்கள் சிஎஸ்கே அணியை வழி நடத்தலாம் என்பதால் அதற்கு தயாராக இருங்கள் என்று 2022இல் தோனி சொன்னது எனக்கு நினைவிருக்கிறது”

- Advertisement -

“அப்போதிலிருந்தே நானும் தயாரானேன். எனவே இது எனக்கு புதிய ஆச்சரியம் கிடையாது. இந்த வருடம் பயிற்சிக்காக நான் வந்த போது அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பது பற்றி சொன்னார். பிளெமிங்கும் நானும் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் கேப்டன்ஷிப் விஷயங்களை பேசுவோம். குறிப்பிட்ட ஒரு சமயத்தில் நான் எப்படி பவுலிங்கை மாற்றுவேன், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பிளமிங் என்னிடம் கேட்டறிந்தார்”

இதையும் படிங்க: தோனி அதை செய்வாருன்னு யாருமே எதிர்பாக்கல.. ருதுராஜிடம் அந்த திறமை இருக்கு.. சேவாக் கருத்து

“நாங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதன் பின்னணியைப் பற்றியும் பேசினோம். ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது போன்றவற்றை நாங்கள் நேருக்கு நேராக பேசுவோம். எனவே கடந்த 2 வருடமாகவே கேப்டன்ஷிப்பை உருவாக்க முயற்சித்தோம். நான் சிஎஸ்கே அணியின் கலாச்சாரத்தை தொடர்ந்து கடைபிடிக்க விரும்புகிறேன். நாங்கள் பெற்றுள்ள வெற்றிகள், செய்யும் விஷயங்கள் ஆகியவற்றில் நான் எதையும் கொஞ்சமும் மாற்ற விரும்பவில்லை. நான் இங்கே வந்து என்னுடைய சொந்த முடிவுகளை எடுத்து வீரர்களுக்கு போதுமான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement