- Advertisement -
ஐ.பி.எல்

இந்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் யார்? புதிய ஜோடியை அறிவித்த – ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தற்போது தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான துவக்க ஜோடி இதுதான் : கேப்டன் அறிவிப்பு

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்குள் சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் வந்துள்ளதால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துவக்க வீரராக விளையாடியதால் சிஎஸ்கே அணியிலும் அவரே துவக்க வீரராகவே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆயுஷ் மாத்ரே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடியதால் இந்த ஆண்டு எந்த ஜோடி துவக்க வீரராக விளையாடப்போகிறது? என்பது குறித்த கேள்வியும் இருந்து வந்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணி ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான துவக்க வீரர்களுக்கான ஜோடி எப்படி இருக்கும்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ருதுராஜ் கெய்க்வாட் : இந்த ஆண்டு நான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் துவக்க வீரர்களாக விளையாடுவோம் என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய புதிய ஜோடியே துவக்க வீரர்களாக விளையாட இருக்கின்றது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா விடயத்தில் செய்த தப்பை பாண்டியாவிற்கும் செய்ஞ்சிடாதீங்க – முகமது கைப் கருத்து

அதன் காரணமாக கடந்த ஆண்டு துவக்க வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதேபோன்று மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் பிரேவிஸ், ஐந்தாவது இடத்தில் ஷிவம் துபே, ஆறாவது இடத்தில் உர்வில் பட்டேல் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

- Advertisement -