ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்ற போதும் அந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். அதேபோன்று இந்திய அணிக்காகவும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வந்த வேளையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
ஹார்டிக் பாண்டியா விடயத்திலும் தப்பு செய்யாதீங்க : முகமது கைப்
இப்படி ஜாம்பவான் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக மாற்றியது அப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரியளவு விமர்சனத்தையும், அதிருப்தியும் ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கேப்டனாக சூரியகுமார் யாதவ் கைப்பற்றியுள்ளதால் தற்போது ஹார்டிக் பாண்டியாவை நீக்கிவிட்டு சூரியகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற பேச்சுக்களும் இருந்து வருகிறது.
ஆனால் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவை கொண்டு வந்தது போல தற்போது பாண்டியாவை நீக்கிவிட்டு சூரியகுமார் யாதவை மும்பை அணியின் கேப்டனாக கொண்டு வரக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
2 வருடங்களுக்கு முன்பு ரோகித் சர்மாவை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் ஹார்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளாக அவர் கேப்டனாக அந்த அணியை பலப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார். இவ்வேளையில் ரோகித் சர்மாவிற்கு செய்ததை போன்று பாண்டியாவிற்கும் செய்ய வேண்டாம் சூரியகுமார் யாதவ் ஒரு ஆப்ஷனாக கேப்டன் பொறுப்பிற்கு இருக்கிறார்.
இதையும் படிங்க : காயத்தால் வெளியேறிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்த கே.கே.ஆர் – யார் தெரியுமா?
ஆனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாற்றக்கூடாது. ஏனெனில் பாண்டியா தற்போது கேப்டனாக தொடர்ந்து வருவதால் அவரது பொறுப்பை நீட்டிக்க வேண்டும். அதைதவிர்த்து வேறு ஒரு வீரரை கேப்டனாக கொண்டு வந்தால் நாளடைவில் கேப்டன் மாற்றம் என்பது வாடிக்கையாக மாறிவிடும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



