காயத்தால் வெளியேறிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்த கே.கே.ஆர் – யார் தெரியுமா?

Harshit Rana
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தற்போது அவரவர்கள் சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்த கே.கே.ஆர் :

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதோடு ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை தற்போது கே.கே.ஆர் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டாவது வீரர் நவ்தீப் சைனி ஆவார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடர் முடிந்த கையோடு 2 இடங்கள் முன்னேற்றம் கண்ட சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக மாற்று வீரராக சௌரத் துபேவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்திருந்தது. நவ்தீப் சைனி ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 33 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement