இந்திய அணிக்குள் போட்டி இருக்கு.. அதுல ஜெய்ஸ்வால், ரிங்குவை கைலயே பிடிக்க முடியாது.. ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad Jaiswal
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடுகிறது.

அதை தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்ற இளம் இந்திய அணி சவாலான தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அணிக்குள் போட்டி:
இந்நிலையில் தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் கூறியுள்ளார். ஆனால் அதில் சற்று மெதுவாக விளையாடக்கூடிய தம்மை விட அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஜெய்ஸ்வால் மற்றும் ஃபினிஷராக அசத்தும் ரிங்கு சிங் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது எங்களின் சில வீரர்களுக்கு மத்தியில் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டிக்கு முன்பாக நாங்கள் அதிக பயிற்சிகளை செய்யவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக நாங்கள் பயிற்சிகளை எடுத்தோம்”

- Advertisement -

“அந்த பயிற்சியில் நாங்கள் சிக்ஸர்களை அடித்து மகிழ்ந்தோம். கண்டிப்பாக அந்தப் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மற்ற அனைவரை காட்டிலும் முன்னிலையில் இருந்தார்கள் என்று நான் சொல்வேன்” என கூறினார். முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரின் 3வது போட்டியில் 123* ரன்கள் குவித்த ருதுராஜ் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: பாவம்யா அவரு.. ஒரு மேட்ச் கூட ஆடல.. சம்மந்தமே இல்லாம கழற்றி ஏன் விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா கேள்வி

இதை தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி வரும் டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்க உள்ள அந்த போட்டியில் மழை வராது என்ற நம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் விரைவில் பயிற்சிகளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement