பாவம்யா அவரு.. ஒரு மேட்ச் கூட ஆடல.. சம்மந்தமே இல்லாம கழற்றி ஏன் விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா கேள்வி

Aakash Chopra 22
- Advertisement -

தென்னாபிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற நட்சத்திர சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணி விளையாடுகிறது.

அந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

பாவம்யா மனுஷன்:
அதில் சிவம் துபே மீண்டும் தேர்வு செய்யப்பட்டது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அறிமுக ஒருநாள் போட்டிக்கு பின் மேற்கொண்டு வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 127 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கழற்றி விடப்பட்டார்.

அந்த நிலையில் மனம் தளராமல் போராடி வந்த அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அதிரடியாக விளையாடி அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு திரும்பினார். அதன் காரணமாக கடந்த அக்டோபரில் நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் தேர்வாகி கிடைத்த வாய்ப்பில் அசத்திய அவர் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்டு தங்கப் பதக்க வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து சமீபத்திய ஆஸ்திரேலிய டி20 தொடரில் தேர்வான அவர் கடைசி வரை 5 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தற்போது இத்தொடரில் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ள அவர் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட பெறவில்லை. இந்நிலையில் அவருடைய தேர்வு பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: முதல் டி20 ரத்து செய்யப்பட காரணமான தெ.ஆ வாரியம் கங்குலிய பாத்து கத்துக்கனும்.. கவாஸ்கர் விமர்சனம்

“சில நேரங்களில் சில வீரர்களின் தேர்வை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா சிவம் துபேவை தேர்வு செய்தது. ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் செய்யப்படவில்லை. இதை எப்படி ஒருவர் அந்த வீரரிடம் சொல்ல முடியும்” என்று பரிதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement