முதல் போட்டியிலேயே 4 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பை வழங்கி அதிரடி காட்டியுள்ள கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ

Ruturaj
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டி சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளுமே காத்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த டாஸ்க்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் கேப்டனாக பதவியேற்ற ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் அளிக்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்து இருந்தது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டியுள்ளார். குறிப்பாக வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், முஷ்டபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய வீரரான சமீர் ரிஸ்வியும் அறிமுகமாகியுள்ளார்.

- Advertisement -

அதனை தவிர்த்து பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : விளம்பரம் தேடாதீங்க.. உலகக் கோப்பைக்காக வீரர்களை களத்தில் ஆடவிடுங்க.. தோனியை மறைமுகமாக சாடிய கம்பீர்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) ரச்சின் ரவீந்திரா, 3) அஜின்க்யா ரஹானே, 4) டேரல் மிட்சல், 5) ரவீந்திர ஜடேஜா, 6) சமீர் ரிஸ்வி, 7) மஹேந்திர சிங் தோனி, 8) தீபக் சாஹர், 9) மஹீஸ் தீக்ஷனா, 10) முஸ்தபிசுர் ரஹ்மான், 11) துஷார் தேஷ்பாண்டே.

Advertisement