விளம்பரம் தேடாதீங்க.. உலகக் கோப்பைக்காக வீரர்களை களத்தில் ஆடவிடுங்க.. தோனியை மறைமுகமாக சாடிய கம்பீர்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது. அதனால் ரோஹித் சர்மா தலைமையில் 2011 போல இந்தியா கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இருப்பினும் அதிலிருந்து பாடங்களை கற்றுள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. அந்த தொடரிலாவது கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் அவமான தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

சாடிய கம்பீர்:
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு பிரபல பிரிட்டானியா நிறுவனத்தின் விளம்பரத்தை தன்னுடைய ட்விட்டரில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் பகிர்ந்துள்ளார். அதாவது எம்எஸ் தோனி தலைமையில் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஓரியோ எனும் பிஸ்கட் நிறுவனத்தின் புதிய பிராண்டை தோனி அறிமுகப்படுத்தினார்.

அப்போது 2011இல் முதல் முறையாக ஓரியோ பிஸ்கட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதாக தோனி விளம்பரத்தில் பேசினார். அதே போல 2022இல் ஓரியோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்தியா 2022 டி20 உலகக் கோப்பை வெல்லும் என்றும் தோனி நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் அந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் பின் 2023இல் மீண்டும் அதே போன்ற விளம்பரத்தில் தோனி நடித்தார். ஆனால் அந்த வருடமும் இந்தியா தோல்வியை சந்தித்தது. தற்போது தங்களுடைய விளம்பரத்தில் உலகக் கோப்பையை பிஸ்கட்டுடன் சம்பந்தபடுத்த வேண்டாம் என்ற வகையில் பிரிட்டானியா நிறுவனம் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கம்பீர் மறைமுகமாக தோனியை சாடியது பின்வருமாறு.

இதையும் படிங்க: முன்னாள் சிஎஸ்கே ஓப்பனிங் பார்ட்னர் டு பிளேஸிஸை.. ஆர்சிபி கேப்டனாக எதிர்கொள்வது.. பற்றி ருதுராஜ் பேட்டி

“உலகக் கோப்பையை விளையாடி வெற்றி பெற்றதால் எனக்கு அதனுடைய அழுத்தமும் தெரியும் மகிழ்ச்சியும் தெரியும். அதை வெல்வதற்காக 140 கோடி இந்தியர்கள் மூச்சை அடக்கி வைத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையை வெல்வது தான் முக்கியம். எனவே நண்பர்களே இனிமேல் உலகக் கோப்பையை சம்பந்தப்படுத்தி திருப்பங்களை கொண்டு வர வேண்டாம். விளம்பரத்தை விளையாட விடாதீர்கள். நமது வீரர்களை விளையாட விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement