முன்னாள் சிஎஸ்கே ஓப்பனிங் பார்ட்னர் டு பிளேஸிஸை.. ஆர்சிபி கேப்டனாக எதிர்கொள்வது.. பற்றி ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad Faf Du Plessis
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஆனால் முதல் போட்டி துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகுவதாக ஜாம்பவான் எம்எஸ் தோனி அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். இருப்பினும் 41 வயதை தொட்டு விட்டதால் அணியின் நலனை கருதி அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாட உள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

பார்ட்னர் கேப்டன்கள்:
முன்னதாக கடந்த 2021 சீசனில் சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கைக்வாட் – பஃப் டு பிளேஸிஸ் ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கி எதிரணிகளைப் பந்தாடி சென்னை 4வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக 633 ரன்கள் குவித்த டு பிளேஸிஸை விட 2 ரன்கள் அதிகமாக 635 ரன்கள் விளாசிய ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

அதன் பின் நடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே தக்க வைக்கத் தவறிய டு பிளேஸிஸ் ஆர்சிபி அணிக்காக வாங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாக சிஎஸ்கே அணியை தலைமை தாங்கும் முதல் போட்டியிலேயே ருதுராஜ் தன்னுடைய முன்னாள் ஓப்பனிங் பார்ட்னரான டு பிளேஸிஸை ஆர்சிபி அணியின் கேப்டனாக எதிர்கொள்ள வேண்டிய வேடிக்கையான நிலையை சந்தித்துள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்கும் அளவுக்கு தோனி தம்மை நம்பியது பெரிய விஷயம் என ருதுராஜ் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் டு பிளேஸிஸ் தற்போது எதிரணியின் கேப்டனாக எதிர்கொள்வது பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது தான் டு பிளேஸிஸை கேப்டன்கள் மீட்டிங்கில் சந்தித்தேன். அப்போது “சில வருடங்களில் நீங்கள் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருப்பீர்கள். நானும் நீங்களும் டாஸ் வீசும் இடத்தை கேப்டனாக பகிர்ந்து கொள்வோம் என்று யார் நினைத்திருப்பார்” என அவரிடம் சொன்னேன். இந்த வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளேன்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் இல்லனா இன்னைக்கு நான் இருந்திருக்க மாட்டேன். பல்வேறு நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்த – ஹார்டிக் பாண்டியா

“இது உற்சாகமான முதல் நாள் ஆட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2 காரணங்களுக்காக கேப்டன்ஷிப் பொறுப்பு நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். முதலாவதாக என்னுடைய ஐபிஎல் பயணம் துவங்கிய அதே அணியில் அங்கமாக இருக்கிறேன். 2வதாக கேப்டன்ஷிப் பொறுப்புக்கு சரியாக இருப்பேன் என்று எம்எஸ் தோனியிடம் நம்பிக்கை பெற்றது. இந்த இரண்டும் நிறைய விஷயங்களை பேசுகிறது” என்று கூறினார்.

Advertisement