ஐ.பி.எல் இல்லனா இன்னைக்கு நான் இருந்திருக்க மாட்டேன். பல்வேறு நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்த – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நான்கு வீரர்களை மட்டுமே அணியில் தக்க வைக்க முடியும் என்கிற விதியால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ஹார்டிக் பாண்டியா ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் அணியால் வாங்கப்பட்டார். அப்படி குஜராத் அணிக்கு சென்ற அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.

அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டும் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை கொண்டு சென்ற ஹார்டிக் பாண்டியா சென்னை அணியிடம் கோப்பையை தவறவிட்டார். அவரது இந்த சிறப்பான கேப்டன்சி திறமைகளை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் மீண்டும் அவரை பெரிய தொகை கொடுத்து மும்பை அணியில் இணைத்தது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியையும் வழங்கியுள்ளது. அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதோடு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் ஹார்டிக் பாண்டியா குறித்த காட்டமான தங்களது கருத்துக்களையும் முன்வைத்து வந்தனர். இருப்பினும் மும்பை அணி அவர்களது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்னதான் பாண்டியா குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தாலும் இந்த ஆண்டு அவர் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாண்டியா குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் வேளையில் தற்போது அவரே வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் குறித்து பேசிய பாண்டியா : ஐபிஎல் இல்லை என்றால் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். ஐபிஎல் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : 5 நிமிஷத்துல ருதுராஜுக்கு வாழ்த்து சொன்ன சூரியகுமார் யாதவ் பாண்டியா விஷயத்துல – என்ன பண்ணாரு தெரியுமா?

எனக்கு ஐபிஎல் அடையாளத்தை கொடுத்துள்ளது. ஐபிஎல் மட்டும் இல்லை என்றால் நான் பரோடாவில் இருந்திருப்பேன். இங்கு இருக்கும் ஹார்டிக் பாண்டியா இருந்திருக்க மாட்டார் அங்கு வேறு ஒருத்தர் இருந்திருப்பார் என நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement