5 நிமிஷத்துல ருதுராஜுக்கு வாழ்த்து சொன்ன சூரியகுமார் யாதவ் பாண்டியா விஷயத்துல – என்ன பண்ணாரு தெரியுமா?

SKY
- Advertisement -

மார்ச் 22-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசனானது கோலாலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பிப்பதற்காக முனைப்புடன் காத்திருப்பதனால் இந்த போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடருக்கான சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நேற்று சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அவரது இந்த புதிய கேப்டன் பதவிக்கு பலரது மத்தியிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்டை பாராட்டியுள்ள மும்பை அணியின் முன்னணி வீரரான சூரியகுமார் யாதவ் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : நீ மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் உனது அமைதியான குணத்தின் மூலமாக சிஎஸ்கே அணியின் புகழையும், பாரம்பரியத்தையும் நீ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வாய் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

- Advertisement -

அதிர்ஷ்டமும் உன்னுடன் இருக்க வாழ்த்துக்கள் என்று சூரியகுமார் யாதவ் பதிவிட்டுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : ருதுராஜ் கெய்க்வாட் நேற்று தான் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார், அப்படி நியமிக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே மும்பை அணியின் முன்னணி வீரர் சூரியகுமார் யாதவ் அவரை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : பதிரனா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? கடைசி நேரத்தில் மேனேஜர் கொடுத்த அப்டேட்.. விவரம் இதோ

ஆனால் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியுள்ள இவ்வேளையிலும் ஹார்டிக் பாண்டியா குறித்து சூரியகுமார் யாதவ் எந்த கருத்தையும் கூறவில்லை. ஏற்கனவே மும்பை அணியின் மாற்றம் நடைபெற்ற போது பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த வேளையில் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மறைமுகமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement