பதிரனா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? கடைசி நேரத்தில் மேனேஜர் கொடுத்த அப்டேட்.. விவரம் இதோ

Matheesa Pathirana
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிகின்றன. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகிய ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கைக்வாட் சென்னை அணியை வழி நடத்த உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவருடைய தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்க உள்ளது. இருப்பினும் இந்த வருடம் அந்த அணிக்கு துவக்க வீரர் டேவோன் கான்வே காயத்தால் விளையாட மாட்டார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் இலங்கை வீரர் மதிசா பதிரனாவும் காயத்தால் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வெளியான அப்டேட்:
குறிப்பாக கிரேட் ஒன் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்ததால் அவர் சென்னை அணிக்காக முதல் 2 – 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியானது. கடந்த வருடம் சென்னை அணிக்காக அறிமுகமாகி 12 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை 8.52 என்ற எக்கனாமியில் எடுத்து 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விடாமல் கட்டுப்படுத்திய அவர் தோனியின் பாராட்டுகளையும் பெற்றார். அந்த வகையில் தோனியின் பாராட்டுகளைப் பெற்ற டெத் பவுலரான அவர் காயத்தால் விளையாடாமல் போனால் அது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பதிரனா ஃபிட்டாக உள்ளதாக அவருடைய மேனேஜர் அமிலா கலுகலேகே கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பதிரனா எங்கே என்ற கேள்விக்கு பதில் இது தான். ஃபிட்டாகியுள்ள அவர் இடியைப் போன்ற பந்துகளை வீசுவதற்கு தயாராகியுள்ளார். அவரை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ஒரு வழியாக நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பவர்பிளே முடிவதற்குள் அவரோட விக்கெட்டை எடுத்துட்டா ஜெயிச்சுடலாம்.. சிஎஸ்கே அணிக்கு ஹெய்டன் டிப்ஸ்

இதனால் முதல் போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதே போல 2 கோடிக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபீஸூர் ரஹ்மானும் இலங்கைத் தொடரில் காயத்தை சந்தித்தார். ஆனால் காயம் பெரிய அளவில் இல்லாததால் அவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணியில் இணைந்துள்ளார். எனவே அந்த 2 வீரர்களில் யாரேனும் ஒருவர் சர்துள் தாகூர், தீபக் சஹருடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளராக பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement