பவர்பிளே முடிவதற்குள் அவரோட விக்கெட்டை எடுத்துட்டா ஜெயிச்சுடலாம்.. சிஎஸ்கே அணிக்கு ஹெய்டன் டிப்ஸ்

Matthew Hayden 2
- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்கு பதிலடி கொடுத்து டு பிளேஸிஸ் தலைமையில் ஆர்சிபி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு பெங்களூரு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த போட்டியில் விராட் கோலி, டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அடங்கிய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கி வெற்றி பெறும் அளவுக்கு தரமானதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஹெய்டன் கொடுத்த டிப்ஸ்:
இந்நிலையில் பெங்களூரு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியை பவர் பிளே ஓவரில் அவுட்டாக்கினால் சிஎஸ்கே வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார். குறிப்பாக சவாலான சேப்பாக்கத்தில் விராட் கோலி தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருவதை சிஎஸ்கே பவுலர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி கொண்டாடக் கூடியவராக இருப்பார். சேப்பாக்கத்தில் அவருடைய சராசரி 30 ஸ்ட்ரைக் ரேட் 111. அதனுடைய அர்த்தம் என்னவென்று தெரிகிறதா? விராட் கோலி போன்ற வீரரின் மகத்துவமும் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேப்பாக்கத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்வது சவாலானதாக இருக்கும்”

- Advertisement -

“சற்று மெதுவாக இருக்கக்கூடிய அந்த மைதானத்தில் டென்னிஸ் பந்து போன்ற பவுன்ஸ் இருக்கும் என்பதால் உங்களுடைய ஷாட்டுகளை அடிப்பது கடினமாகும். இருப்பினும் அது போன்ற சூழ்நிலைகளில் தான் விராட் கோலி ஆபத்தானவர். ஒருவேளை அவர் 20 ஓவர்களும் பேட்டிங் செய்வதற்கு தயாராக வந்தால் போட்டியை வெல்ல முடியும். பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் 200 ரன்கள் அடிப்பது எளிதானது”

இதையும் படிங்க: அவருக்கு பாரமா இருக்காம.. தோனி அதையும் செஞ்சுருந்தா இன்னும் வசதியா இருக்கும்.. வாசிம் ஜாபர் அதிரடி

“ஆனால் சேப்பாக்கத்தில் அது அவசியமல்ல. பந்து மிகவும் கீழாக வரக்கூடிய இந்த மைதானத்தில் ஜடேஜா போன்றவர் ஸ்டம்ப் லைனில் துல்லியமாக வீசினால் 150 – 130 ரன்கள் அடிப்பது கூட கடினமாக இருக்கும். எனவே பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் விராட் கோலியை அவர்கள் அவுட் செய்ய வேண்டும். கடந்த 5 இன்னிங்ஸில் அவர்கள் அதை 3 முறை செய்துள்ளனர். தற்போது அவர்கள் நான்காவது முறையாக அதை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement