ஃபைனலில் ட்விஸ்ட்.. ஆப்கனை தடுத்த மழை.. சரித்திரம் படைத்த இந்தியா.. தங்கத்தை கொடுத்த ரூல்ஸ் என்ன?

Asian Games India
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டது. அதில் முதலாவதாக நடைபெற்ற மகளிர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில் ஆடவர் பிரிவில் ருத்ராஜ் கைக்வாட் தலைமையிலான இளம் அணி களமிறங்கியது. மேலும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருப்பதன் காரணமாக இந்தியா நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் காலிறுதியில் நேபாளையும் அரையிறுதியில் வங்கதேசத்தையும் தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக ஜெய்ஸ்வால், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், சாய் கிஷோர் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினர். அந்த நிலைமையில் இத்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி அக்டோபர் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்றது.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு அக்பரி 5, முகமத் சேஷாத் 4, நூர் அலி ஜாட்ரான் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் அப்சர் சாஸாய் 15, கரீம் ஜானதி 1 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷஹீதுல்லா 49* (43) ரன்கள் குவித்தார்.

அவருடன் கேப்டன் குல்பதின் நைப் 27* (24) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்த போது வந்த மழை சுமார் 2 மணி நேரமாக பெய்து போட்டியை நிறுத்தியது. அப்படியே 2வது இன்னிங்ஸ் நேரம் முடியும் வரை மழை விடாமல் பெய்ததால் வேறு வழியின்றி இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்தியா சார்பில் அர்ஷிதீப், சிவம் துபே, சபாஷ் அஹ்மத், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவர்கள் ஐசிசி தரவரிசையை நடுவர்கள் பயன்படுத்தினார். அதில் 264 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. மறுபுறம் 10வது இடத்தில் இருப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதையும் படிங்க: CWC 2023 : தோனிக்கு அப்றம் அவர் தான் டெத் ஓவரின் கில்லி.. வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க.. ரெய்னா ஆதரவு

இதன் வாயிலாக முழுவதுமாக கிரிக்கெட்டை தவிர்த்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும் ஒரு தொடரில் முதல் முறையாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒரு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதாவது 1998 காமன்வெல்த் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய குறிப்பிடத்தக்கது.

Advertisement