CWC 2023 : தோனிக்கு அப்றம் அவர் தான் டெத் ஓவரின் கில்லி.. வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க.. ரெய்னா ஆதரவு

Suresh Raina
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் களமிறங்கியுள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

சமீபத்திய 2023 ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. எனவே இந்த போட்டியிலும் சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவை தோற்றுவித்து தங்களுடைய பயணத்தை இந்தியா வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரெய்னா ஆதரவு:
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஃபினிஷர்களாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ளார்கள். அதன் காரணமாக சூரியகுமார் யாதவுக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். இருப்பினும் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் 6வது இடத்தில் களமிறங்கி கடைசி 15 – 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய அவர் வாய்ப்பு கொடுத்தால் ஃபினிஷிங் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்பதை காட்டினார்.

- Advertisement -

இந்நிலையில் தோனிக்குப்பின் டெத் ஓவர்களில் அதிரடியாக செயல்படுவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சூரியகுமார் இருப்பதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். மேலும் கில் மிகவும் முக்கியமான வீரர் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெத் ஓவர்களில் எம்எஸ் தோனியை தவிர்த்து வேறு இந்திய வீரர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றால் அது சூரியகுமார் யாதாவாக இருப்பார். அதே போல சுப்மன் கில் இந்தியாவின் மிகவும் வலுவான வீரராக இருப்பார்”

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

“குறிப்பாக நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை வந்து செயல்பட வேண்டும். இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோருடன் விளையாடியுள்ள அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் இரட்டை சதத்தை அடித்துள்ளார். சச்சின் – கங்குலி போல ரோஹித் – கில் தற்போது ரசிகர்களின் மனதை வெல்லும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார்.

Advertisement