IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டமானது நாளை அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்? என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் அனுபவ வீரரான விராத் கோலியும், நான்காவது இடத்தில் அண்மையில் சதம் அடித்து பார்முக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயரும் களமிறங்குவார்கள்.

அதே போன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுலும், ஆல்ரவுண்டர்களாக ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் ரவிந்திர ஜடேஜாவும் களமிறங்குவார்கள். அதே போன்று எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் நாளை போட்டியில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்று தெரிகிறது. அப்படி விளையாடும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு சேப்பாக்கம் மைதானம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs AUS : முதல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement