IND vs AUS : முதல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

World Cup Chepauk
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011 போல சொந்த மண்ணில் சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்படி அனல் பறக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

அதில் ஏற்கனவே 5 உலகக்கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா நிச்சயமாக இப்போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 2023 ஆசிய கோப்பையை வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ள இந்தியா சமீபத்திய ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போலவே இப்போட்டியிலும் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இப்போட்டி அக்டோபர் 8ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1934இல் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடி 1952இல் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்த இம்மைதானம் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக ஜொலித்து வருகிறது.

1. தற்போது 40,000 ரசிகர்களுக்கு மேல் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 1987 முதல் இதுவரை 23 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 2 போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை இந்தியா பதிவு செய்துள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (401) அடித்த வீரராக இந்தியாவின் எம்எஸ் தோனி சாதனை படைத்துள்ளார். அதிக விக்கெட்டுகளை (8) எடுத்த வீரராக வங்கதேசத்தின் முகமது ரஃபீக் முதலிடத்தில் இருக்கிறார். இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோர் : ஏசியன் லெவன் 337/3, ஆப்பிரிக்கன் லெவனுக்கு எதிராக, 2007

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நாளன்று சேப்பாக்கத்தில் மழை இதற்கான வாய்ப்பு வரும் 20% மட்டுமே இருப்பதால் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். மேலும் பெரும்பாலும் வானம் லேசான மேகமூட்டத்துடன் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும்.

இதையும் படிங்க: கில் இல்லையா? அப்போ ஆஸி தான் ஜெயிக்கும்.. அவர்கிட்ட டெக்னிக்கல் தப்பு இருக்கு.. பின்ச் மகிழ்ச்சி பேட்டி

அதனால் பேட்ஸ்மேன்களை விட இங்கே பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனாலேயே இங்கு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 231 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 218 ரன்கள் குறைகிறது. மேலும் இங்கு 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement