கில் இல்லையா? அப்போ ஆஸி தான் ஜெயிக்கும்.. அவர்கிட்ட டெக்னிக்கல் தப்பு இருக்கு.. பின்ச் மகிழ்ச்சி பேட்டி

Aaron Finch
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சமீபத்திய ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

அதன் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை நிச்சயம் இந்தியா தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் அப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆஸி ஜெயிக்கும்:
அதன் காரணமாக அப்போட்டியில் மற்றொரு துவக்க வீரர் இசான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் துவக்க வீரராக விளையாடிய அவரும் ஆசிய கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி நல்ல ஃபார்மில் இருப்பதால் நிலைமையை சமாளித்து வெற்றியில் பங்காற்றுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை கொடுக்கக்கூடிய திறமையை கொண்டிருக்கும் கில் தங்களின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்துவதாக முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

ஏனெனில் இஷான் கிசான் டெக்னிக்கல் அளவில் தடுமாற்றத்தை கொண்டிருப்பதால் தங்களுடைய பவுலர்கள் எளிதாக கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய தீர்வு செய்யப்பட்ட 11 பேர் அணியுடன் களமிறங்க முயற்சிக்கும் ஆனால் அது எப்போதுமே திட்டப்படி நடக்காது. ஏனெனில் இந்த பெரிய தொடரில் காயம், சோர்வு போன்றவை வருவது வழக்கமாகும்”

- Advertisement -

“அந்த வகையில் கில் இல்லாமல் போனாலும் இந்தியா நல்ல அணியுடன் களமிறங்கும். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் கில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கும் பயமாகும். ஏனெனில் பெரும்பாலும் எவ்விதமான பலவீனத்தையும் கொண்டிருக்காத அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சரியாக பந்து வீசுவதற்கு தடுமாறியுள்ளது. எனவே தற்போது இஷான் கிஷனுக்கு எதிராக ஆஸ்திரேலிய பவர் பிளே ஓவர்களில் கச்சிதமாக பந்து வீசுவார்கள்”

இதையும் படிங்க: வீடியோ : அன்று காயப்படுத்திய ஹரிஷ் ரவூப்க்கு இன்று சிக்சருசன் கண்ணடித்த லீடி.. மாஸ் பதிலடி

“குறிப்பாக ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் அவுட் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக இசான் கிசான் சில டெக்னிக்கல் தவறுகளை கொண்டுள்ளார். குறிப்பாக அவருடைய பாதம் சிறிது முன்னதாகவே மூடுகிறது. அதனால் ஸ்விங் பந்துகளை முன்னதாக வீசினால் அவரை எளிதாக அவுட்டாக்கலாம். இருப்பினும் செட்டிலானால் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையைக் கொண்டுள்ள அவர் ஆரம்பத்தில் தடுமாறும் பலவீனத்தைக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement