அன்று காயப்படுத்திய ஹரிஷ் ரவூப்க்கு இன்று சிக்சருசன் கண்ணடித்த லீடி.. மாஸ் பதிலடி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நெதர்லாந்துக்கு எதிராக தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் 49 ஓரில் 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சவுத் ஷாக்கில் மற்றும் முகமது ரிஸ்வான் தலா 68 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதை துரத்திய தெர்லாந்துக்கு பஸ் டீ லீடி 67, விக்ரம்ஜித் சிங் 52 ரன்கள் எடுத்ததை தவிர்த்து ஏனைய வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

மாஸ் பதிலடி:
முன்னதாக இந்த போட்டியில் நெதர்லாந்து தோல்வியை சந்தித்தாலும் ஆல் ரவுண்டராக அசத்திய பஸ் டீ லீடி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட அவர் முகத்தில் அடி வாங்கி மோசமான காயத்தை சந்தித்தார்.

குறிப்பாக பந்து பட்ட வேகத்தில் ஹெல்மெட் கம்பிகள் அவருடைய கண்ணுக்கு கீழே தையல் போடும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 29வது ஓவரின் 4வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட டீ லீடி புல் ஷாட்டை வாயிலாக எளிதான சிக்ஸர் அடித்தார். சொல்லப்போனால் கிட்டத்தட்ட கடந்த உலகக்கோப்பை போலவே பவுன்ஸாகி வந்த பந்தை இம்முறை லாவகமாக எதிர்கொண்ட அவர் சிக்சர் அடித்து ஹரிஷ் ரவூப்க்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதை விட அப்போது “என்னுடைய பந்திலேயே சிக்ஸர் அடித்து விட்டாயா” என்பது போல் ஹரிஷ் ரவூப் முறைத்தார். அதற்கு கோபப்படாத டீ லீடி கடந்த முறை காயத்தை சந்தித்த அதே வலது கண்ணால் கண்ணடித்து ஹரிஷ் ரவூப்க்கு கூலான பதிலடி கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் 2003 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தம்முடைய தந்தை 4 விக்கெட் எடுத்தது போல் இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் தந்தை மகன் ஜோடி என்ற அபூர்வமான சாதனையும் அவர்கள் படைத்தனர். மேலும் 67 ரன்களும் எடுத்த அவர் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4+ விக்கெட்டுகளை எடுத்த முதல் நெதர்லாந்து வீரர் என்ற சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement