- Advertisement -
இந்திய கிரிக்கெட்

236 ரன்ஸ்.. மாணவ் சுதர் மேஜிக்.. எங்களாலையும் முடியும்.. ஸ்ரேயாஸ் அணியை பந்தாடிய ருதுராஜ் அணி

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் இந்தியா சி மற்றும் டி அணிகள் மோதிய போட்டி அனந்தபூரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி போராடி 164 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, தேவ்தூத் படிக்கல் 0, கேஎஸ் பரத் 3 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 48-6 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அக்சர் படேல் அதிகபட்சமாக அரை சதமடித்து 86 ரன்கள் குவித்து கை கொடுத்தார். இந்தியா சி சார்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைசாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

மாணவ் சுதர் 7 விக்கெட்ஸ்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கும் கேப்டன் ருதுராஜ் 5, சாய் சுதர்சன் 7, ரஜத் படிடார் 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 43-4 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் அரை சதமடித்து 72, அபிஷேக் போரல் 34 ரன்கள் எடுத்து காப்பாற்றினர். இந்தியா டி அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விகெட்டுகள் எடுத்தார்.

அதன் பின் 4 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா டி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 54 (44) ரன்கள் குவித்து திருப்புமுனையை உண்டாக்கினார். ஆனால் எதிர்புறம் தேவ்தூத் படிக்கல் 56, ரிக்கி புய் 44, அக்சர் படேல் 28 ரன்களில் மாணவ் சுதர் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ருதுராஜ் அணி வெற்றி:

அதனால் இந்தியா டி அணியை 236 ரன்களுக்கு சுருட்டிய சி அணி சார்பில் அதிகபட்சமாக மாணவ் சுதர் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இறுதியில் 233 ரன்களை துரத்திய இந்தியா சி அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் 22 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் எங்களாலும் அதிரடியாக விளையாட முடியும் என்பது போல் பேட்டிங் செய்த கேப்டன் ருதுராஜ் 8 பவுண்டரியுடன் 46 (48) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: ரூல்ஸ் தெரியாம எதிர்ப்பு சொல்லாதீங்க.. அஸ்வின் செஞ்சதை பாருங்க.. ரோஹித் கருத்து பற்றி பிரக்யான் ஓஜா

அதை வீணடிக்காமல் அடுத்து வந்த ஆர்யன் ஜூயல் 47, ரஜத் படிடார் 44, அபிஷேக் போரல் 35*, மாணவ் சுதர் 19* ரன்கள் எடுத்தனர். அதனால் 233-6 ரன்கள் எடுத்த ருதுராஜ் சி அணி ஒருநாள் மீதம் வைத்து மூன்றாவது நாளிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 6 புள்ளிகளை பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் சரன்ஸ் ஜெயின் 3 விக்கெட்டுகள் எடுத்தும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -