ரூல்ஸ் தெரியாம எதிர்ப்பு சொல்லாதீங்க.. அஸ்வின் செஞ்சதை பாருங்க.. ரோஹித் கருத்து பற்றி பிரக்யான் ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன் சில அடிப்படை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மெகா ஏலத்துக்கு முன் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை 4க்கும் மேல் பிசிசிஐ உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறைகள் சில மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஏனெனில் அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலரை களமிறக்குகிறது. ஆனால் அடிப்படையான கிரிக்கெட்டே 11 வீரர்களை கொண்ட விளையாட்டாகும். எனவே அந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று பலரும் கடந்த சீசனில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க:

குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறையால் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் வருவதில் பின்னடைவு ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார். ஆனால் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் துபே, துருவ் ஜுரேல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இம்பேக்ட் வீரர் போன்ற விதிமுறைகள் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப கிரிக்கெட்டில் புதுமையை புகுத்துவதாக முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

எனவே அதை குறை சொல்லாமல் ஒருமுறை அஸ்வின் ரிட்டையர்டு அவுட்டானது போல விதிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஓஜா பேசியது பின்வருமாறு. “இது போன்ற விதிமுறைகள் கடைசியில் நிலையாக உருவாகும். ஏனெனில் இவை உங்களுடைய நன்மைக்காக பயன்படுத்தப்படுகின்றன”

- Advertisement -

விதிமுறை தேவை:

“உண்மையில் அந்த புதிய விதிமுறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அணிகளுக்கு தெரிவதில்லை. ஒருமுறை ரவிச்சந்திரன் அஸ்வின் ரிட்டையர்டு அவுட்டாகி சென்றது ராஜஸ்தான் அணிக்கு உதவியாக அமைந்தது. எனவே இது போன்ற விதிமுறைகளை வைத்து உங்களால் பயனை உருவாக்க முடியும். அது நீங்கள் உங்களுடைய திட்டத்தை நன்றாக உருவாக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது”

இதையும் படிங்க: ஒரு காலத்துல எப்படி இருந்த டீம்.. இப்போ இப்படி ஆகிடுச்சு.. பாகிஸ்தான் அணி குறித்து கவலை தெரிவித்த அஷ்வின்

“எனவே ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. ஐபிஎல் தொடரில் 200 அல்லது 220 ரன்கள் என்பது இப்போதெல்லாம் எளிதாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு லீக் அல்லது நாடும் தங்களது தொடரில் சொந்தமான விதிமுறைகளை வைத்திருப்பதே அழகு. அது போல அவர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த விதிமுறையை உருவாக்கியுள்ளனர். அதை ஏன் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்.

Advertisement